யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் ஆவா குழுவுடன் தொடர்புடைய நபரொருவரை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்துள்னர்.

யாழ்ப்பாணம், கோப்பாய் - கொண்டாவில் பகுதியில் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 18 வயதுடைய இளைஞராவார்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கோப்பாய் பொலிஸார், விசாரணைகளின் பின்னர் நீதிமனற்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.