ஓமான் பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்த 191 புற்று நோய்க் கட்டிகளை 4 மணித்தியாலங்களில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக கிண்ணஸ் சாதனையை நிலை நாட்டியுள்ளனர்.

எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்று நோய்க் கட்டிகளை நீக்கியமையே இது வரை உலக சாதனையாக இருந்தது.

இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதன் பின்னரும் கர்ப்பம் தரிக்கலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண் சத்திரசிகிச்சையின் பின் இரண்டு நாட்களில் வைத்திய சாலையை விட்டு சென்று விடலாம் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இது வரை ஒரு சத்திர சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட அதிக பட்ச கட்டிகளின் எண்ணிக்கை 84 எனவும் ஓமான் பெண்ணிற்கு செய்த இந்த சத்திர சிகிச்சை அதை முறியடித்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.