யாழ். திருநெல்வேலிப் பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் தனியார் பேருந்தொன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை இவ் விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பேருந்தானது தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள், வாகனம் என்பவற்றுடன் மோதி அருகிலுள்ள தனியார் வங்கியினுள் புகுந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார், தனியார் பேருந்து சாரதியை கைது செய்துள்ளனர்.