தேர்­தலை நடத்­தினால் படு­தோல்வி அடைவோம் என்­பதை உணர்ந்தே அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை திட்­ட­மிட்டு பிற்­போட்டு வரு­கின்­றது. அர­சாங்கம் முன்­னெ­டுக்கும்  சதியில் ஜே.வி.பி.யும் கூட்­ட­ணி­யினர் என தேசிய சுதந்­திர முன்­னணி தெரி­வித்­துள்­ளது. 

தேசிய சுதந்­திர முன்­ன­ணியின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்­ற­போது கட்­சியின் உப­த­லைவர் ஜயந்த சம­ர­வீர எம்.பி இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ரணில் – -மைத்­திரி அர­சாங்கம் கூட்­டணி அமைத்து இரண்டு ஆண­்டு­களில் இந்த நாட்டு மக்­களின் நம்­பிக்­கையை இழந்­துள்­ளன. இந்த அர­சாங்­கத்தின் ஊழல், மோச­டிகள், குற்­றங்கள் என அனைத்­தையும் மக்கள் நன்­றாக உணர்ந்­துள்­ளனர். அர­சாங்கம் ஏதேனும் ஒரு தேர்­தலை நடத்­தி­னாலும் கூட அதில் படு­தோல்­வியை சந்­திக்க நேரிடும். மக்கள் இன்று அர­சாங்­கத்தை நிரா­க­ரித்து வரு­கின்­றனர். ஆக­வேதான் மக்­களின் நிலைப்­பாட்­டினை அறிந்­து­கொண்டு அர­சாங்கம் தேர்­தலை திட்­ட­மிட்டு பிற்­போட்டு வரு­கின்­றது. மக்கள் விடு­தலை முன்­னணி இன்று தாம் நியா­ய­மாக போரா­டு­வ­தா­கவும், தமது போராட்­டத்தில் பொது எதி­ர­ணியை இணைந்­து­கொண்டு போராட வரு­மாறும் அழைப்பு விடுக்­கின்­றனர். ஆனால் உள்ளூராட்சித் தேர்­தலை பிற்­போ­டவும் மாகா­ண­சபை தேர்தல் பிற்­போ­டவும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியே கார­ண­மாகும்.

குறிப்­பாக மூன்று மாகா­ணங்­க­ளுக்­கான தேர்தல் பிற்­போட மக்கள் விடு­தலை முன்­னணியே கார­ண­மாகும். பெண்களின் பிர­தி­நி­தித்­துவம் என்ற கதையை கூறிக்­கொண்டு தேர்­தலை பிற்­போட அர­சாங்கம் திட்டம் தீட்­டி­ய­போது அவர்­க­ளுக்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை இல்­லா­த ­நி­லையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ரவுடன் அர­சாங்கம் பெரும்­பான்­மை­யாகப் பெற்­றது. அப்­போது மக் கள் விடு­தலை முன்­னணி வாக்­க­ளிக்­காது நிரா­க­ரித்­தி­ருந்தால் இன்று மாகா­ண­ச­பைகள் தேர்தல் இடம்­பெற்­றி­ருக்க வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படவே அவ்வாறு செய்ததாக கூறுகின்றனர், ஆனால் இப்போது உள்ளூராட்சி சபைத் தேர்த லையும் தள்ளிப்போடும் சூழ்ச்சிகள் இடம் பெற்று வருகின்றன என்றார்.