தாய் இறந்த சோகம் தாங்­காது நெஞ்­சு­வலி ஏற்­பட்டு ஒரு­மணி நேரத்தில் மகனும் உயி­ரி­ழந்த சம்­பவம் யாழ்ப்­பா­ணத்தில் நேற்று இடம்­பெற்­றுள்­ளது.

யாழ்ப்­பாணம், கச்­சேரி பகு­தியை சேர்ந்த பால­சிங்கம் தவ­மலர் (71 வயது) மற்றும் அவ­ரது மகனும் இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யு­மான பால­சிங்கம் பிர­சன்னா (38 வயது) ஆகிய இரு­வ­ருமே  உயி­ரி­ழந்­த­வர்களாவர்.

இச் சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

நேற்றுக் காலை குறித்த தாயா­ருக்கு நெஞ்­சு­வலி ஏற்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து அவ­ரது மக­னான பால­சிங்கம் பிர­சன்னா அவரை வைத்­தி­ய­சா­லைக்கு அழைத்து சென்­றுள்ளார்.

எனினும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர். இதைக் கேட்ட மகன் அதிர்ச்­சி­ய­டைந்­த­துடன் நெஞ்சு வலியும் ஏற்­பட்­டது. இதை­ய­டுத்து உட­ன­டி­யாக அவர் அதி­தீ­விர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார்.