வடக்கில் காணி­களை விடு­விப்­பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­ சேன விசேட அவ­தானம் செலுத்­தியுள் ளார். மாதாந்தம் முப்­ப­டை­யி­னரை சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கின்­றன.

இதன்­படி வடக்கு காணி விடு­விப்பு தொடர்­பான நட­வ­டிக்­கைகள் வெற்­றி­க­ர­மான பாதையை நோக்கிப் பய­ணித்து கொண்­டிருக்கின்றன. அத்­துடன் மலை­ய­கத்தில் 50 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்களுக்கு காணி உறு­திப்­பத்­திரம் வழங்க நட­வ­டிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு – செல­வுத்­திட்­டத்தில் காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சின் ஒதுக்­கீடு மீதான குழு­நிலை விவா­தத்தில் கலந்துகொண்டு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஊடக சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யதன் பின்­னரே நான் காணி அமைச்­ச­ராக பொறுப்­பேற்றேன். இதுபோன்று காணி விட­யத் தில் காணப்­படும் பிரச்­சினைகளையும் தீர்ப்பேன்.

2020 ஆம் ஆண்­டாகும் போது மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியின் பிர­காரம் காணி உரித்து இல்­லா­த­வர்­க­ளுக்கு உரித்­து­ரி­மையை வழங்­குவோம். நாடு­பூ­ரா­கவும் 12 மில்­லியன் காணி துண்­டுகள் உள்­ளன. இதன்­போது நவீன தொழில்­நுட்­பத்தை கொண்டு வரு­வதன் மூலம் காணி­களை இனங்­காண்­பது இல­குவாகும். இதன் ஊடாக அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளுக்கு காணி­களை வழங்க முடியும். மேலும் மறைக்­கப்­பட்­டுள்ள அரச காணி­களை இனங்­காணவும் முடியும். 

நில அள­வை­யா­ளர்­களின் சேவை மிகவும் அளப்­ப­ரி­ய­தாகும். அபி­வி­ருத்­திக்­கான அடித்­த­ளத்தை நில அள­வை­யா­ளர்­களே முன்­னெ­டுக்­கின்­ற னர். இதன்­படி எமது அர­சாங்­கத்தின் பிர­தான அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளான மொர­க­ஹ­கந்த, மத்­திய அதி­வேகப் பாதை, கட்­டு­நா­யக்க விமான நிலைய ஓடு­பாதை  போன்­ற­வற்­றிற்­கான நில அள­வை­களை பூர­ண­மாக முடித்­துள்ளோம். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­ த­லுக்­கான எல்லை நிர்­ணய அள­வை­க­ளையும் முழு­மை­யாக முடித்­துள்ளோம். இதன்­படி தேர்­தலை இல­கு­வாக நடத்த முடியும். நான்கு மாதத்தில் அதி­க­ள­வி­லான காணி உரித்­து­ரி­மை­களை வழங்­கி­யுள்ளோம். 

வெளி­நாட்டு மற்றும் உள்­நாட்டு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு தேவை­யான காணிகளை இல­கு­வாகப் பெற்­றுக்­கொ­டுக்க கூடிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காப்­பு­றுதி தொட ர்பில் பேச்­சு­வார்த்தை நடத்தி தீர்­மானம் எடுக்­க­வுள்ளோம்.

பொது­ந­ல­வாய சங்­கத்தில் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்றம் தொடர்பில் குற்றம் சுமத்­தி­னாலும் இலங்கை பாரா­ளு­மன்றம் சரி­யாக செயற்­ப­டு­வ­தாக அவர்கள் கூறி­யுள்­ளனர். அத்­துடன் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான தீர்வை வரி­யற்ற வாக­னங்கள் அனைத்தும் வழங்­கப்­பட்டு விட்­டன. 

மேலும் மலை­ய­கத்தில் 50 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட­வர்களுக்கு காணி உறு­திப்­பத்­திரம் வழங்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்றோம்.

வடக்கில் காணி­கள் விடுவிக்கப்படு வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன விசேட அவதானம் செலுத்தியுள்ளார். மாதாந்தம் முப்படையி னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படு கின்றன. இதன்படி வடக்கு காணி விடு விப்பு தொடர்பான நடவடிக்கைகள் வெற் றிகரமான பாதையை நோக்கி பயணிக்கின் றன. மேலும் வடக்கில்  காணி நடமாடும் சேவையையும் நடத்தவுள்ளோம் என்றார்.