நீதி­மன்ற உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் பல் அங்­கத்­த­வர்­களைக் கொண்ட வட்­டா­ரங்­களைத் தவிர்ந்த 133 உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தேர்­தலை நடத்­து­வதில் எந்த தடை­களும் இல்லை என கட்­சித்­த­லை வர்கள் கூட்­டத்தில் தெரி­வித்த தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலை­வர் மஹிந்த தேசப்­பி­ரிய, தேர்­தலை நடத்து­வ­தற்கு தயா­ராக இருப் ­ப­தா­கவும் ஆணைக்­குழு கூடி இறுதி முடிவை எடுக்க வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

எவ்­வா­றா­யினும் கட்­சித்­த­லை­வர்­க­ளி­டையே உள்ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் தொடர்பில் எவ்­வி­த­மான  இணக்­கப்­பா­டு­களும் எட்­டப்­ப­டாத நிலை­யி­லேயே கூட்டம் நிறை­வ­டைந்­துள்­ளது. 

உள்­ளு­ராட்சி தேர்­தல்கள் கால­தா­ம­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை, பிணை­மு­றிகள் தொடர்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர் விப­ரங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளமை ஆகிய விட­யங்­களால் பல்­வேறு சர்ச்­சைகள் தீவி­ர­மா­கி­யுள்ள நிலையில் கட்­சித்­த­லை­வர்கள் கூட்டம் நேற்று வெள்ளிக்­கி­ழமை மாலை 5.30இற்கு பாரா­ளு­மன்­ற கட்டடத்தொகுதியில் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. 

சாபா­நா­யகர் கரு ஜெய­சூ­ரிய தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சபை­ மு­தல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல, பிரதி அமைச்­சரும், ஆளும் தரப்பு பிரதி பிர­தம கொற­டா­வு­மான அஜித் பீ பெரேரா, ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான நிமல்­சி­றி­பால டி சில்வா, அமைச்­சர்­க­ளான மகிந்த சம­ர­சிங்க, சரத் அமு­கம, ஜே.வி.பி. தலை­வரும் எதிர்க்­கட்சி பிர­தம கொற­டா­வு­மான அநு­ர­கு­மர திஸா­நா­யக்க, அமைச்சர் மனோ கணேசன், ஈழ­மக்கள் ஜன­நா­யகக்­கட்­சியின் செய­லாளர் நாயகம் டக்ளஸ் தேவா­னந்தா எம்.பி, கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்றக் குழுக்­களின் தலைவர் தினேஷ் குண­வர்த்­தன எம்.பி ஆகியோர் பங்­கேற்­றி­ருந்­தனர். 

அத்­துடன் உள்­ளூராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் சர்ச்­சைகள் தொடர்­பான விட­யப்­ப­ரப்பு என்­பதால் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மகிந்த தேசப்­பி­ரிய மற்றும் சட்­டமா அதிபர் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இந்­நி­லையில் கூட்டம் ஆரம்­பித்த போது ஜே.வி.பி.யின் தலை­வ­ரான அநு­ர­கு­மரா திஸா­நா­யக்க எம்.பி., தேர்­தல்கள் திட்­ட­மிட்டு தாம­தப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. விட­யத்­திற்கு பொறுப்­பான அமைச்சர் நாட்டில் இல்லை. ஜன­நா­ய­கத்தின் பண்­பான பொது­மக்­களின் வாக்­க­ளிக்கும் உரிமை மறுக்­கப்­ப­டு­கின்­றது. எந்­த­வி­த­மான தேர்தல் முடிவும் வர­மு­டியும். ஆனால் வெல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக தேர்­தலை தாம­தப்­ப­டுத்­து­வது நேர்த்­தி­யான அர­சியல் செயற்­பாடு அல்­லவே என்­ற­வாறு மிகக்­க­டு­மை­யான கருத்­துக்­களை முன்­வைக்­க­லானார். 

அத­னைத்­தொ­டர்ந்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்­பிலும் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மிகக் கடு­மை­யான கருத்­துக்­களை முன்­வைத்தார். ஒரு கட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியே தேர்­தலைத் தாம­தப்­ப­டுத்தும் செயற்­பாட்டில் பின்­ன­ணியில் இருக்­கின்­றது என்று நேர­டி­யா­கவே குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­க­லானார். 

எவ்­வா­றா­யினும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தற்­போ­துள்ள நிலை­மையில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும் என்­பது குறித்து சட்ட மா அதி­ப­ரி­டத்தில் ஆலோ­ச­னையைக் கோரினார். அச்­ச­ம­யத்தில் சட்ட மா அதிபர் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­குகள் குறித்து விளக்­கங்­களை வழங்­கி­ய­தோடு எதிர்­வரும் 4ஆம் திகதி வரையில் அவ்­வ­ழக்­குகள் மீதான உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதற்கு முன்­ன­தாக அவ்­வ­ழக்­கினை எடுப்­ப­தாயின் ஆகக்­கு­றைந்­தது எதிர்­வரும் திங்­கட்­கி­ழ­மை­யா­வது அந்த வழக்­கு­க­ளுக்கு மாற்­றாக மனுத்­தாக்கல் செய்­யப்­பட வேண்டும். அதன்­மூலம் அவ்­வ­ழக்­கினை 30ஆம் திக­திக்கு முன்­ன­கர்த்­து­வது குறித்து முயற்­சிக்க  முடியும் என்­றுள்ளார். மேலும் 4ஆம் திக­திக்கு முன்­ன­தாக வழக்­கு­களை மீளப்­பெ­று­வ­திலும் காணப்­படும் சிக்­கல்­க­ளையும் அதற்­கான பிர­தி­யீ­டு­க­ளையும் தௌிவு­ப­டுத்­தி­யுள்ளார்.

இதன்­போது மீண்டும் அநு­ர­கு­மர திஸா­ந­யக்க எம்.பி, வழக்­குகள் திட்­ட­மிட்டே தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.அவற்றை மீளப்­பெற்­றாக வேண்டும். இல்­லையேல் தேர்­தலை அனைத்து உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கு­மாக முழு­மை­யாக நடத்­து­வ­தற்கு முடி­யாது போகும். துண்­டு­தண்­டாக நடத்­த­வது பொருத்­த­மற்­றது என்று குறிப்­பிட்­டுள்ளார். 

இதன்­போது ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பி­னர்கள் நேர்த்­தி­யாக பதி­ல­ளிக்­காது விட்­டாலும் துண்­டு­தண்­டாக தேர்­தலை நடத்­து­வது பொருத்­த­மற்­ற­தென்ற தொனியில் சில­க­ருத்­துக்­களை முன்­னைத்­தனர். எனினும் பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா சட்­ட­தி­ருத்­த­மொன்றைச் செய்து தேர்­தலை நடத்­து­வது குறித்த சில கருத்­துக்­களை முன்­வைத்­தி­ருந்தார். 

இத­னை­ய­டுத்து சில கருத்­துப்­ப­ரி­மாற்­றங்கள் இடம்­பெற்ற நிலையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, மனுத்­தாக்­க­லொன்றை செய்­வது குறித்த யோச­னையை கவ­னத்தில் கொள்­வ­தா­கவும் அதற்கு வேண்­டு­மான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க தயா­ராக இருப்­ப­தா­கவும் தேர்தல் கால­த­ம­த­மாகிச் செல்­வ­தற்கு இட­ம­ளிக்­கவே முடி­யாது என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.  இச்­ச­ம­யத்தில் தினேஷ் குண­வர்த்­தன எம்.பியும் தேர்­தலை நடத்த வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டா­கின்­றது என்று குறிப்­பிட்­டுள்ளார்.

இவ்­வாறு கருத்­துப்­ப­ரி­மாற்­றங்கள் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது தேர்­தல்கள் ஆணைக்­கு­ழவின் தலைவர் மகிந்த தேசப்­பி­ரிய, வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம் ஆணைக்­குழு தேர்­தலை நடத்­து­வ­தற்­கு­ரிய முன்­னா­யர்த்த நட­வ­டிக்­கை­களை செய்து வரு­கின்­றது. நிதி­மன்றம் உத்­தி­யோக பூர்­வ­மாக எனக்கு எவ்­வி­த­மான அறி­வித்­தல்­க­ளையும் செய்­ய­வில்லை. ஆகவே அந்த செயற்­பா­டு­களை இடை­நி­றுத்த வேண்­டிய அவ­சியம் எனக்கு இல்லை. 

இருப்­பினும் கிடைக்­கப்­பெற்ற தக­வ­லுக்கு அமைய பிரச்­சி­னைக்­கு­ரிய பகு­திகள் தவிர்ந்து ஏனைய இடங்­களில் தேர்­தலை நடத்­து­வ­தற்கு முடியும். குறிப்­பாக புதிய நிர்­ண­யத்தின் பிர­காரம் மொத்­த­மான 341 உள்­ள­ராட்சி மன்றங்கள் உள்ளன. அவற்றில் 133உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதில் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லையென்று கருதுகின்றேன். ஆகவே அவற்றுக்கான தேர்தலை நடத்தவது குறித்து தேர்தல் ஆணைக்குழு கூடி முடிவொன்றை எடுக்க முடியும் என்றுள்ளார். 

எனினும் துண்டுதண்டாக தேர்தலை நடத்துவதா? இல்லை நீதிமன்றத்தில் மற்றுமொரு மனுத்தாக்கல் செய்து வழக்கு விசாரைணைகளை முன்னகர்த்துவதா இல்லை வழக்குகளை மீளப்பெற்றுக்கொண்டு தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதா? என்பது தொடர்பில் எவ்விதமான இணக்கப்பாடொன்றும கட்சித்தலைவர்களிடத்தில் ஏற்பட்டிருக்காத நிலையில் குறித்த கூட்டம் இரவு 7மணிக்கு நிறைவடைந்துள்ளது. 

இதேவேளை இன்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழவின் கூட்டம் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.