லண்டனில் 29 வயதான இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் காலை நேரத்தில் உறவில் ஈடுபட்ட போது அவரது பார்வை பறிபோய் பின்னர் மீண்டுள்ளது.

செக்ஸ் வீரியத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்தும் வயாகரா மாத்திரையால் கண்பார்வை பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பல்லைக்கழக நிபுணர்கள் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

வயாகரா மாத்திரையில் சில்டெனாபில் என்ற மூலக்கூறு உள்ளது. அதில் உள்ள மூலப்பொருட்கள் கண்விழித்திரையில் இருந்து மூளைக்கு செல்லும் ஒளி சிக்னல்களை தடுத்து நிறுத்தும் சக்தி கொண்டது.

இதனால் கண்பார்வை பாதிப்புக்கும், பார்வை பறிபோவதற்கு காரணமாக உள்ளது. இந்த சில்டெனாபில் மூலக்கூறு கண்விழித்திரையில் நிரந்தரமாக தங்கி செல்களை கொன்று பார்வையை படிப்படியாக குறைத்து பின்னர் முழுவதும் பறிபோக செய்யும்.

இந்த சோதனை நல்ல உடல் நலத்துடன் இருந்த சுண்டெலிகளில் நடத்தப்பட்டது. வயாகரா மாத்திரை கொடுத்த 2 நாளிலேயே அவற்றின் கண்பார்வையில் பாதிப்பு ஏற்பட்டதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

குறித்த இளைஞன்  உறவில் ஈடுபட்ட போது தனது பார்வை பறி போனதையடுத்து பதறி,  உடனடியாக வைத்தியரை நாடியுள்ளார். குறித்த    இளைஞனை பரிசோதித்து அந்த நபரின் பார்வை குறைபாட்டை வைத்தியர்கள் சரி செய்துள்ளனர்.

மருத்துவ சிகிச்சைக்குப் பின்னர் தனது காதலியை இரு கண்களால் காதலியை கண்ட குறித்த இளைஞரும் அவரது காதலியும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி அன்பை பரிமாறிக்கொண்டுள்ளனர்.