வவுனியா, மாமடு குளத்தில் மூழ்கி சிறுமியும் இளைஞரும் பலியாகினர். பலியான இருவரும் மகாறம்பைக் குளத்தைச் சேர்ந்த உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

பதினைந்து வயதான அச்சிறுமி முதலில் குளத்தில் மூழ்கியதாகவும் அதைக் கண்ட இளைஞர், சிறுமியைக் காப்பாற்றுவதற்காகக் குளத்தில் குதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருவரும் உறவினர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இருவரும் கடைசியில் உயிரிழந்தனர்.

சிறுமி குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கினாரா, இது விபத்துத்தானா, தற்கொலையா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.