பிறந்த நாள் விழாவொன்றின்போது ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குளியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.

கம்புறுபொல என்னும் இடத்தில் மூனமல்தெனிய பகுதியில் நேற்று (23) இரவு பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்று வீடொன்றில் நடந்துகொண்டிருந்தது.

அப்போது அதில் கலந்துகொண்ட சிலருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

அப்போது, மறைத்து வைத்திருந்த வாளொன்றை எடுத்த நபர் மற்றொருவர் மீது வீசினார். இதில் அந்நபர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். வாளால் தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் 32 வயதான மூனமல்தெனியவாசி என்றும் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான அவரது மனைவி கர்ப்பிணி என்றும் தெரியவந்துள்ளது.