இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கல்வியல் ஒன்றியம் மற்றும் கொட்டகலை நகர வர்த்தகர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று இலங்கை தொழிலாளர் காங்கரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கிணங்க மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் தலைமையில் கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் கல்வியல் ஒன்றியத்தின் செயற்பாடுகள், மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகள் மற்றும் அதிபர்கள், ஆசிரியர்கள், எதிர்நோக்கும் பல்வேறு குறைபாடுகளை அமைச்சருக்குத் தெரியப்படுத்தியதோடு காங்கிரஸின் கல்வியல் ஒன்றியத்தின் எதிர்கால நகர்வுகள் தொடர்பாகவும் மற்றும் கொட்டகலை நகர அபிவிருத்தி தொர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. 

இந்நிகழ்வில் மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மருதபாண்டி ரமேஸ்வரன் உட்பட அம்பேகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தினேஸ், இலங்கை தொழிலாளர் காங்கரஸின் இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாந்த் மற்றும் இ.தொ.காவின் பல முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர். 

(க.கிஷாந்தன்)