பாடசாலை மாணவர்களுக்கு சூட்சுமமாக ஆபாச வீடியோக்களை விநியோகித்த கும்பல் கைது

Published By: Digital Desk 7

24 Nov, 2017 | 12:07 PM
image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து செயற்படும் சட்டவிரோத செயற்பாடுகள் எமது நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே செல்கிறது . அந்த வகையில் பாடசாலை அருகில் போதை பொருட்கள் உள்ளிட்ட மாணவர்களுக்கு பொருத்தமற்ற பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் நாடளாவிய ரீதியில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பொலிஸாரின் குறித்த அதிரடி நடவடிக்கையில் முல்லைத்தீவில் பாடசாலை மாணவர்களை இலக்காக வைத்து ஆபாச வீடியோக்களை கைத் தொலைப்பேசிகளில் பதிவேற்றி கொடுத்த கும்பல் சிக்கியுள்ளனர்.

பொலிஸாரிடம் சிக்கியுள்ள குறித்த கும்பல் கைத் தொலைப்பேசிகளை விற்பனை செய்யும் பேரில் ஆபாச வீடியோக்களை மாணவர்களுக்கு பதிவேற்றி கொடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2000த்திற்கும் அதிகமான தமிழ் சிங்கள மக்களின் ஆபாச மற்றும் இரகசிய வீடியோக்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். மேலும் ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்த மடி கணினி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சட்ட விரோத கும்பல் மாணவர்களின் தொலைப் பேசிகளுக்கு ஆபாச வீடியோக்களை பதிவேற்றி  கொடுப்பதற்கு 100 ரூபாவையும் மாணவர்கள் அல்லாத ஏனையோரிடம் பென் ட்ரைவ்களில் வீடியோக்களை பதிவேற்றி கொடுப்பதற்கு 200 ரூபாய் தொடக்கம் 500 ரூபாய் வரை பெற்றுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கும்பல் மிக நீண்ட காலமாக குறித்த சட்ட விரோத செயற்பாட்டில் மிகவும் சாமர்த்தியமாக எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு ஆபாச வீடியோக்களை சேமித்து வைத்திருந்த மடி கணினியை பகுதி பகுதியாக கழட்டி வைத்து வாடிக்கையாளர்கள் வீடியோக்களை பதிவேற்றி தருமாறு கேட்கும் பொழுது மாத்திரம் மடி கணினியை மீள் பொருத்தி வீடியோக்களை பதிவேற்றி கொடுத்து வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்க மாலைகளை திருடிச்...

2025-03-19 11:01:14
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 10:35:33
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3...

2025-03-19 09:22:23
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38
news-image

இன்றைய வானிலை

2025-03-19 06:23:07
news-image

'கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு” எனும் பெயரை...

2025-03-19 05:00:29
news-image

சந்தாங்கன்னி மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நீச்சல் தடாக...

2025-03-19 04:04:47