கிழக்கு மாகா­ணத்தில் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான  போட்டிப்  பரீட் சையில்  40 புள்­ளி­க­ளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்­ட­தா­ரி­க­ளுக்கும் நிய­ம­னங்­களை  வழங்க ஆளுனர் முன்­வ­ர­வேண்­டு­மென கிழக்கின் முன்னாள்  முத­ல­மைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.

அவர் மேலும் கூறு­கையில்,

மாகா­ணத்தில் மூவா­யி­ரத்து நூற்று 84 வெற்­றி­டங்கள் உள்ள நிலை­யில்­அ­தனை நிரப்­பு­வ­தற்­கான அனு­ம­தியும் உள்ள நிலை யில் நிய­ம­னங்­களை வழங்­கு­வது கடி­ன­மான விடயம் அல்ல தற்­போது   பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­மன விட­யத்தில்    சில­ருக்கு அநீ­தி­ய­ிழைக்கும் வகை­யி­லான  நட­வ­டிக்­கைகள்  முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக  அறியக் கிடைக்­கின்­றது.

கிழக்கு மாகா­ணத்தில் முதலில்  5021  ஆசி­ரியர்  வெற்­றி­டங்கள் காணப்­பட்ட  நிலையில்  வெளி மாகா­ணங்­க­ளுக்கு நிய­மிக்­கப்பட்ட எமது  ஆசி­ரி­யர்­களை  கடந்த 2016 ஆம் ஆண்டு  எமது  மாகா­ணத்­தி­லேயே  நிய­மித்த  போது  4884 வெற்­றி­டங்­களை  நாம்  நிர ப்ப  வேண்­டிய தேவை­யேற்­பட்­டது,  இதை­ய­டுத்து பட்­ட­தா­ரிகள்  ஆர்ப்­பாட்­டங்கள்  மூலம் அர­சாங்­கத்­துக்கு அளித்த அழுத்தம் மூலமும்  நாம்  மேற்­கொண்ட  தொடர் முயற்­சி­யி­னாலும்  எமக்கு முதற்­கட்­ட­மாக 1700 பட்­ட­தா­ரி­களை  நிய­மிப்­ப­தற்­கான அனும தியை  நாம்  பெற்றுக்  கொண்டோம். இத­ன­டிப்­ப­டையில்  நாம் முதற்­கட்­ட­மாக 259  பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை கடந்த ஜூன் மாதம் வழங்­கினோம். இந்­நி­லையில்  ஏனைய பட்­ட­தா­ரி­களை நிய­மிப்­ப­தற்கு இடம்­பெற்ற போட்­டிப்­ப­ரீட்­சையில் 2600 பட்­ட­தா­ரிகள் 40 புள்­ளி­க­ளுக்கு மேல்  பெற்­றுள்­ளனர்.

40 புள்­ளி­களைப் பெற்ற சில­ருக்கு மாத்­தி ரம் நிய­ம­னங்­களை  வழங்கி  ஏனையோரை புறக்­க­ணிப்­ப­தற்­கான   நட­வ­டிக்­கைகள்  இடம்­பெ­று­வது  ஒரு   போதும்  ஏற்றுக்கொள்ள முடி­யாத விட­ய­மாகும்.

எனவே  இவர்­களுள் 1441 பேருக்கு  நிய­ ம­னங்­களை  வழங்­கு­கின்ற போது மீத­மு ள்ள  ஆயி­ரத்து 159  பேருக்­கான நிய­ம­னங்­க­ளையும் ஆளுநர் வழங்க வேண்டும்.

ஏனெனில் கிழக்கின்  மீத­மி­ருக்­கின்ற வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­கான அனு­ம­தியைத் தரு­வ­தாக தேசிய முகா­மைத்­துவத் திணைக்­களம்  ஏற்­கனவே  எமக்கு உறு­தி­ய­ளித்­தது, ஆகவே  இந்த வருட  நிறை­வுக்கு குறித்த பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­களை ஆளு நர் வழங்கி வைக்க வேண்டும்.

 அது  மாத்­தி­ர­மன்றி  பின்னர் எஞ்­சி­யி­ருக் கும்  2025  வெற்­றி­டங்­க­ளுக்கும் விரைவில்  அனு­ம­தியைப்  பெற்று பட்­ட­தா­ரி­களை உள்­ளீர்த்து நிய­ம­னங்­களை விரைந்து வழங்க வேண்டும். அத்­துடன் 35முதல்  45 வய­துக்­கி­டைப்­பட்ட  பட்­ட­தா­ரிகள் அனை­வ­ரையும் முதற்­கட்ட நிய­ம­னங்­களில் இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில்  அடுத்து வரும்  நிய­ம­னங்­களின்  போதும் 35 வய­துக்­குட்­பட்­ட­வர்கள் மாத்­தி­ரமே  நிய­மிக்­கப்­படப் போகின்­றனர்,

எனவே  35 வய­துக்கு மேற்­பட்டபட்­ட­தா­ரி­க­ளுக்கு இது இறுதி சந்­த­ர்ப்பம் என்­ப­தனால்  அவர்­களை கட்­டாயம் இணைத்துக் கொள்ள வேண்டும்.

நாம்  குறித்த  பட்­ட­தா­ரி­களை கருத்­திற் ­கொண்டே   கடும் முயற்­சி­களை மேற்­கொ ண்டு பட்­ட­தா­ரி­களின் வய­தெல்­லையை 45 ஆக மாற்­றினோம்.

எனவே  ஆளுநர் 35 முதல் 45 வய­து­வ­ரை­யான பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நிய­ம­னங்­க­ளையும் முதற்­கட்ட நிய­ம­னங்­களின் போது வழங்க வேண்டும் என்­ப­துடன் இல்­லா­வி டின்  மீண்டும் கிழக்கில்  போராட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­மாயின், அதற்கு ஆளு­நரே  பொறுப்­பேற்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.