மழை­யுடன் கூடிய கால­நி­லை­யா­னது வடக்கு, கிழக்கு மற்றும் வட-­மத்­திய மாகா­ணங்­களில் எதிர்வரும் 5 நாட்­க­ளுக்கு நீடிக்கும் என வானிலை அவ­தான நிலையம் எதிர்வு கூறி­யுள்­ளது.  

இந்­நி­லையில் மேற்கு வங்­கா­ளத்தில் ஏற்­பட்டி­ருக்கும் புயலின் தாக்­க­மா­னது தற்­போது இலங்­கையை நோக்கி நகர்­கின்­ற­மையால்  இலங்­கையின் தென்மேற்கு கரை­யோரப் பகு­தி­களில் எதிர்வரும் வாரங்­களில் கடும் மழை பெய்யும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை  கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகா­ணங்­க­ளிலும் அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­திலும் இடி­யுடன் கூடிய மழை பெய்யும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

மேற்கு, சப்­ர­க­முவ மற்றும் மத்­திய மாகா­ணங்­க­ளிலும் காலி, மாத்­தறை மாவட்­டங்­க­ளிலும்  பிற்­பகல் 2 மணிக்கு பின்னர் மழையுடன் கூடிய கால­நிலை நிலவும் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக , இரத்­தி­ன­புரி, காலி மற்றும் மாத்­தறை ஆகிய மாவட்­டங்­களில் அதி­கூ­டிய மழை வீழ்ச்­சி­யாக 75 தொடக்கம் 100 மில்லி மீற்றர் வரை எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. 

மேற்கு, வட மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்­திய மாகா­ணங்­களில் பனி மூட்­டத்­து­ட­னான கால­நிலை காணப்­படும் எனவும் கூறப்­பட்­டுள்­ளது. 

கடல் பிர­தே­சங்­களில் புத்­த­ளத்­தி­லி­ருந்து திரு­கோ­ண­மலை வழி­யாக கொழும்பு , அம்­பாந்­தோட்டை மற்றும் மட்­டக்­க­ளப்பு வரை­யான பகு­தி­களில் இடி­யுடன் கூடிய மழை பெய்யும். புத்­த­ளத்­தி­லி­ருந்து திரு­கோ­ண­மலை வழி­யாக காங்­கேசன் துறை  வரை­யான கடல் பிர­தே­சங்­களில் காற்றின் வேக­மா­னது மணிக்கு 30  தொடக்கம் 40 கிலோ மீற்றர்  வேகத்தில்  இருக்கும்.     எனவே   கடற்றொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.