ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் விஜயமானது ஜெனீவா பிரேரணை அமுல்படுத்தல் விவகாரத்துடன் எவ்விதத்திலும் தொடர்பு பட்டதல்ல என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக 'த இந்து' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

ஜெனீவா விவகாரம் தொடர்பில் எவ்விதமான நிகழ்ச்சி நிரலும் இல்லையென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

மேலும் , சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதன் ஓர் அங்கமாகவே ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.