நாவலப்பிட்டிபொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெளிகம்பொல கிராமத்தில்  பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பொன்றை பிரதேசவசிகள் பிடித்துள்ளனர்.

மரக்கறித் தோட்ட விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு மரத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக இன்று காலை 10 மணியளவில்  சென்ற போதே  மரத்தடியில்  மலைப்பாம்பை அவதானித்துள்ளார்.

மலைப்பாம்பை கண்ட பிரதேசவாசிகள் அச்சம் கொண்டதுடன் பாம்பையும் மடக்கி பிடித்துள்ளனர்.

அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல்போன நிலையிலேயே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 

பிடிக்கப்பட்ட மலைபாம்பை நல்லத்ததண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.