ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக லாரன்ஸ் பூனை

Published By: Digital Desk 7

23 Nov, 2017 | 05:28 PM
image

ஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. இப்பூனைக்கு ட்விட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பிரிட்டிஷ் தூதரகத்தால் லாரன்ஸ் ஆஃப் அம்டன் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் பூனை கடந்த மாதம் விலங்குகள் காப்பகத்திலிருந்து கொண்டு வரப்பட்டது.

தற்போது லாரன்ஸ் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்தப் பூனையின் நடவடிக்கைகளை அனைவரும் அறிந்து கொள்ளும்வண்ணம் சமூக வலைதளத்தில் 'லாரன்ஸ் ஆஃப் அம்டன்' என்ற பெயரில் கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது.

தற்போது லாரன்ஸை 5000க்கும் மேற்பட்டவர்கள் பின் தொடர்கிறார்கள்.

இதுகூறித்து பிரிட்டிஷ் துணை தூதர அதிகாரி லாரா டவுபன் கூறும்போது,

"லாரன்ஸ் மூலம் ஜோர்டானின் வித்தியாசமான பக்கத்தை பிரிட்டிஷ் சுற்றுலாப் பயணிகள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது. மேலும் இதனால் ஜோர்டானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்துக்கு தனித்துவம் கிடைத்துள்ளது.

கருப்பு வெள்ளை நிறத்தில் காணப்படும் லாரன்ஸ் எலி பிடிப்பதை தவிர்த்து செய்யும் அதன் பிற செயல்கள் ட்விட்டரில் பதிவிடப்படுகிறது. ட்விட்டரில் சில பின் தொடர்பாளர்கள் அதன் புகைப்படத்தின் கீழ் அது சற்று பருமனாக இருக்கிறது என்று பதிவிட்டுள்ளதால் லாரன்ஸ் தற்போது சோகமாக இருக்கிறது. அதனால் அதனை சரிசெய்ய லாரன்ஸ் உடற்பயிற்சி செய்து வருகிறது” என்று கூறியுள்ளார்.

மறைந்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி டி.இ. லாரன்ஸ் நினைவாக இப்பூனைக்கு இப்பெயர் சூட்டப்பட்டதாக பிரிட்டிஷ் வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அடுத்த அதிரடி! - அமெரிக்க கல்வித்...

2025-03-21 14:37:02
news-image

அருகில் உள்ள துணைமின்நிலையத்தில் தீ -...

2025-03-21 13:03:24
news-image

ஆயிரம் சைபர் டிரக் கார்களைத் திரும்பப்...

2025-03-21 13:15:48
news-image

இஸ்ரேலின் விமானதாக்குதலில் பெற்றோர்கள் பலி- காசாவின்...

2025-03-21 11:02:57
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் கர்ப்பிணிபெண்ணொருவரும் பலி

2025-03-20 17:23:18
news-image

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களிற்கு எதிரான டிரம்ப்...

2025-03-20 13:53:10
news-image

இந்தியாவில் பஞ்சாப் எல்லையில் ஒரு வருடத்திற்கு...

2025-03-20 12:39:09
news-image

உக்ரைனின் மின்நிலையங்கள் அணுஉலைகளை அமெரிக்கா நிர்வகிக்க...

2025-03-20 11:26:42
news-image

அமெரிக்காவில் சிஐஏ தலைமையகத்திற்கு வெளியே நபர்...

2025-03-19 21:20:40
news-image

டிரம்பிற்கு வழங்கிய வாக்குறுதியை ஒரு சில...

2025-03-19 15:06:57
news-image

அமெரிக்காவில் அரசியலுக்காக மக்கள் இலக்குவைக்கப்படும் நிலை...

2025-03-19 13:37:46
news-image

ஜோன்எவ் கென்னடி படுகொலை - ஆவணங்களை...

2025-03-19 11:03:10