சர்வதேச விண்வெளி நிலையம் இலங்கையை நேற்று புதன்கிழமை மாலை 6:25 க்கு கடந்துள்ளது.
குறித்த சர்வதேச விண்வெளி நிலையத்தை இலங்கையர்கள் வெற்றுக்கண்களினால் அவதானிக்க முடிந்தது.
மனிதரினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த சர்வதேச விண்வெளி நிலையமானது, பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள, மிக விசாலமான சர்வதேச சொத்தென விண்வெளி மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது,
108 மீற்றர் விசாலமான இந்த விண்வெளி நிலையமானது, பூமியிலிருந்து 408 கிலோமீற்றர் உயரத்தில் உள்ளது.
சர்வதேச விண்வெளி கலத்தை வெற்றுக்கண்களினால் பார்வையிடுவதற்கு, இலங்கையர்கள் நேற்றையதினம் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், மாலை 6:25 மணிமுதல் ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே தென்பட்டுள்ளது.
வெளிச்சத்துடன், இலங்கையின் கிழக்கு திசையில் மிகவேகமாக, அது நகர்ந்துசென்றுள்ளது. 1998 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச விண்வெளி மத்திய நிலையத்தின் அந்த கலத்தில், ஒரு தடவையில் அறிவியலறிஞர்கள் அறுவர் மட்டுமே ஆராய்ச்சிகளில் ஈடுபடமுடியும்.
இந்த விண்வெளி கலமானது சுற்றாடல் தொடர்பில் மிகமுக்கியமான ஆராய்சிகள் பலவற்றை மேற்கொண்டுள்ளது.
இந்த கலம், ஒரு மணித்தியாலயத்தில் 27 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில், பூமியை விடவும் வேகமாக பயணிக்கக்கூடியது.
இது வானில் நிலைகொண்டுள்ள, மூன்றாவது பிரகாசமான பொருளாகும். அதனை, எதிர்வரும் 27 ஆம் திகதிவரையிலும் இலங்கை வானில் அவ்வப்போது வெற்றுக்கண்களினால் அவதானிக்க முடியும் என்றும் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) அறிவித்துள்ளது,
இதேவேளை, 24 ஆம் திகதி அதிகாலை 5:04 க்கு 29 பாகைக்கு மேலாக வடமேற்கில் தோன்றி, 12 பாகைக்கு மேலாக தென், தென்கிழக்கு திசையில் 4 நிமிடங்களுக்குள் மறையும்.
அன்றையதினம் மாலை 6:18க்கு 17 பாகைக்கு மேலே மேற்கு, வடமேற்கு திசையில் தோன்றி, 11 பாகைக்கு மேலே வடக்கு திசையில் 3 நிமிடங்களில் கடக்கும்.
அத்துடன் 25 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4:14 க்கு, கிழக்கு திசையில் 24 பாகைக்கு மேலே தோன்று, ஒருநிமிடத்துக்கும் குறைந்த நேரத்தில் 21 பாகையில் கிழக்கு திசையில் மறையும்.
ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் திகதியன்று அதிகாலை 4:57 க்கு தென்மேற்கு திசையில், 18 பாகைக்கு மேலாக தோன்றி, தென் மற்றும் தென்மேற்று திசையில் இரண்டு நிமிடங்களில் கடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM