நினைத்தது என்னவோ, நடந்தது என்னவோ...!

Published By: Devika

23 Nov, 2017 | 02:55 PM
image

அவுஸ்திரேலியாவின் கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றுக்கு வித்தியாசமான பிரச்சினை ஒன்று உருவாகியுள்ளது.

அடிலெய்டில் உள்ள ‘ப்ளெக்ஃப்ரியார்ஸ் பிரையறி’ என்ற பாடசாலையில், புனித மார்ட்டின் டி பொர்ரெஸின் சிலை ஒன்றை நிறுவ முடிவு செய்தனர். இதற்காக ஒரு சபையும் அமைக்கப்பட்டது.

சிறுவன் ஒருவனுக்கு புனிதர் அப்பம் ஒன்றை வழங்கும் வடிவில் இந்த உருவத்தை வடிவமைக்கத் திட்டமிட்டனர்.

முதலில் இதை இரு பரிமாண முறையிலேயே அமைப்பதாக முடிவு செய்யப்பட்டு அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டிருந்தது. எனினும், பிறகு முப்பரிமாணச் சிலையாக உருவாக்க முடிவுசெய்தனர்.

இதன்படி உருவான சிலையை பாடசாலையில் நிறுவியபோதுதான் அச்சிலை ‘வேறுவிதமாக’ - சற்று ஆபாசமாக - அர்த்தப்படுத்திக்கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதை அதிகாரிகள் உணர்ந்தனர்.

இதையடுத்து, நிறுவிய சிலையை அகற்ற விரும்பாத அதிகாரிகள், சிலையை ஒரு துணியால் மூடி தற்காலிக தீர்வு அளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right