அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான  இராணுவ விமானம் நேற்று மதியம் சுமார் 2.45 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலை தடுமாறி பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவின் தென்கிழக்கு கடலில் விழுந்தது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள்  தீவிரமாக ஈடுபட்டு 8 பேரை மீட்டுள்ளனர்.

ஏனைய 3  பேரையும் அமெரிக்கா ராணுவத்தினரும், ஜப்பான் ராணுவத்தினரும் இணைந்து தேடி வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.