பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால மேலும் தெரிவிக்கையில்,
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சந்திக்க ஹத்துருசிங்கவை விடுவித்தால் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிப்பதற்கான நடவடிக்கையை எடுக்க தயாராகவுள்ளோம்.
இதுதொடர்பான உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவருக்கும் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் இலங்கை அணியின் பயிற்சியாளராக இருந்த கிரகம் போர்ட் கடந்த ஜுன் மாதம் இலங்கை அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, நிக் போத்தாஸ் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ஹத்துருசிங்கவை நியமிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள நிலையில், தற்போது இலங்கை கிரிக்கெட் சபை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்திக்க ஹத்துருசிங்க இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஆனாலும் ஹத்துருசிங்கவை பங்களாதேஷிலிருந்து விடுவித்துக்கொள்வதில் சட்ட சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை அணிக்கு நிரந்தர தலைமைப் பயிற்சியாளர் ஒருவர் இல்லாத நிலையில், பங்களாதேஷின் பயிற்சியாளராக இருந்த இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக்க ஹத்துருசிங்கவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டது.
இதன் முயற்சியாக ஹத்துருசிங்க பங்களாதேஷ் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்க இதுவரை நீக்கப்படவில்லை. அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் அவர் பங்களாதேஷ் செல்லாமல், கடிதம் மூலம் அந்நாட்டு கிரிக்கெட் சபைக்கு தனது ராஜினாமாவை அறிவித்திருந்தார்.
இதன் பின்னணியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சந்திக்க ஹத்துருசிங்கவை தக்க வைப்பதற்கான நம்பிக்கையை இழந்துள்ளதாகவும், அவரைப் பிரதியீடு செய்வோர் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
எனினும், அவருடைய வருகையை தொடர்ந்து எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள நஸ்முல் ஹஸன், ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கான உரிய காரணத்தை அவர் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள சட்ட சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் ஹத்துருசிங்க கோரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஹத்துருசிங்கவை பயிற்சியாளராக நியமிப்பது குறித்து இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம், பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM