(ஆர்.யசி)
தேவை கருதி ஒரு கொள்கைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் ஒன்றிணைந்து செயற்படும் நிலைமை வரும் நிலையில் இணையத்தயார். நாம் யாரையும் நிராகரிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.
நீண்ட காலமாக இணைந்து செயற்பட்ட நபர்கள் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதில் தவறேதுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பொது எதிரணியினர் என கூறிக்கொண்டு இன்று தனித்து செயற்படும் நபர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இறுதித் தேர்தலில் பெயர் பட்டியிலில் என்னால் கைச்சாதிட்டப்பட்ட தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நபர்களாவர்.
இன்று இவர்கள் பொது அணியினராக இருந்த போதிலும் எம் மத்தியில் முரண்பாடுகள் ஏதுமில்லை. ஒரு மணிநேரத்தில் அல்ல சில நாட்களில் நாம் அனைவரும் மீண்டும் ஒரே கொள்கையில் கைகோர்த்து செயற்பட முடியும். அதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இரு தரப்பையும் இணைக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் நான் சில முயற்சிகளை மேற்கொண்டேன். நிலைமைகள் மோசமானதாக இல்லை, எனினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் நிலைமைகள் எவ்வாறு மாறுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM