டுவிட்டர் பதிவுகள் மூலம் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்தி விடுபவர் நடிகர் கமல். அந்த வகையில் அவரின் புதிய டுவிட் ஒன்று தீபிகாவின் தலை வேண்டும் என்று கூறியுள்ளது.

நடிகை தீபிகா படுகோனே பத்மாவதி திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து அவருக்கு அதிகளவு உயிர் அச்சுறுத்தல் இருந்து வருகின்றது.

பத்மாவதி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தீபிகாவின் தலையை கொண்டு வந்தால் ரூ. 5 கோடி தருவோம் என சில மத தலைவர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால் பல திரையுலக பிரபலங்கள் தீபிகாவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் தீபிகாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே கமலின் டுவிட்டர் பதிவும் அமைந்துள்ளது.

எனக்கு தீபிகாவின் தலை வேண்டும் என்று ஷாக் கொடுத்து இடைவெளிவிட்டு காப்பாற்ற வேண்டும் அவரின் உடலை தாண்டி, சுதந்திரத்தை தாண்டி மரியாதை தரவேண்டும். என கூறுகிறது அவரின் டுவிட்டர் பதிவு.