களுத்துறை, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த நீர்வெட்டானது இன்று காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அச் சபை மேலும் தெரிவித்துள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொரன்துதுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயகல, சுகரகமுவ, பெம்புவல, மகோன, பேருவளை, களுவமோதர, மொரகல, அளுத்கம, தர்காநகர், மற்றும் பெந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டானது அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.