கல்­முனை விவ­காரம் தொடர்­பாக தமிழ், முஸ்லிம் தலை­வர்­க­ளது அடுத்­த­கட்ட உயர்­மட்ட சந்­திப்பு எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்­த­னது அலு­வ­ல­கத்தில்  இன்று   புதன்­கி­ழமை மாலை 3 மணி­யளவில் நடை­பெ­ற­வுள்­ளது.

கல்­முனை உள்­ளூராட்­சி ­சபை விவ­காரம் தொடர்­பாக அமைச்சர் பைசர் முஸ்­தபா தலை­மை­யி­லான கூட்டம் கொழும்பில் இடம்­பெற்­றி­ருந்­தது.

அதற்­க­மைய இந்த இரண்­டாம்­ கட்டக் கூட்டம்  இன்று  நடை­பெ­ற­வி­ருக்­கி­றது. அத­னி­டையில் இரு­த­ரப்­பி­லு­மி­ருந்து தெரி­வாகும் ஐவர் கொண்ட குழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றன. தமிழர் தரப்­பி­லி­ருந்து தெரி­வான ஐவர் ­கொண்ட குழுவின் விபரம் வரு­மாறு:

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் செய­லாளர் மாவை சேனா­தி­ராஜா எம்.பி., ஊட­கப்­பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­திரன் எம்.பி., அம்­பாறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஏ.கே.கோடீஸ்­வரன், ரெலோ கட்­சியின் உப­த­லை­வரும் கல்­முனை மாந­க­ர ­ச­பையின் முன்னாள் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான ஹென்றி மகேந்­திரன்,  கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் கு.ஏகாம்பரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.