அமெரிக்காவில் பெற்ற மகள்களை கள்ளக் காதலனை விட்டு கற்பழிக்க வைத்த தாயின் கொடூர செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த ஓஹிஹோ மாகாண நீதிமன்றம், சிறுமிகளின் தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தாயாரின் கள்ளக்காதலனுக்கு 25 வருடங்கள் சிறை தண்டனையும் விதித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஓஹிஹோ மாகாணத்தை சேர்ந்த பெண்ணிற்கு 9 மற்றும் 11 வயதான இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த பெண்ணிற்கு அமெரிக்காவின் விர்ஜின் தீவில் கள்ளக்காதலன் ஒருவன் இருந்துள்ளான்.

இந்நிலையில், ஒரு நாள் உன்னுடைய மகள்களுடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று கள்ளக்காதலன் அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளான். அதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தன்னுடைய 2 மகள்களை அடித்து துன்புறுத்தி நிர்வாண படுத்தி கட்டிலில் கட்டிப்போட்டு, அந்த பெண் தன்னுடைய ஆசை காதலனை கற்பழிக்க அனுமதித்துள்ளார்.

இதுபோல், பல நாட்களாக மகள்களை நிர்வாண கோலத்தில் கட்டிலில் கட்டியவாறு அந்த பெண்ணும், அவளுடைய கள்ளக்காதலனும் பல சித்ரவதைகளை செய்து வந்துள்ளனர்.

ஆனால், பள்ளி பாடங்களை இணையதளம் மூலம் படிக்க மட்டும், தனது மகள்களை கட்டிலிலிருந்து அவர் அவிழ்த்து விட்டு வந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவரது மகள்களில் ஒருவர், தன்னுடைய அம்மாவிற்கு தெரியாமல் தனது ஆசிரியருக்கு தாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி மின்னஞ்லில் அனுப்பியுள்ளார். 

இதைப்படித்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் பொலிஸாரை உடனடியாக தொடர்பு கொண்டு இதுகுறித்து தெரிவித்துள்ளார். 

இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சிறுமிகளை மீட்டதுடன், அவரது தாயார் மற்றும் அவளுடைய கள்ளக்காதலனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும், அவர்கள் மீது சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல், பாலத்காரம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர். 

இதையடுத்தே, நீதிமன்றம் மேற்படி தீர்ப்பையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.