நைஜீரியாவின் வடகிழக்கு நகரான முபியில், பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.

காலை நேரத் தொழுகைக்காக பள்ளிவாசலில் ஆண்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். அவர்களில் ஒருவராக பள்ளிவாசலினுள் பதின்ம வயது நபர் ஒருவரும் நுழைந்தார்.

சில நிமிட நேரத்தில் தனது உடலில் பொருத்தப்பட்டிருந்த குண்டை அவர் வெடிக்கச் செய்தார். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் உடல் சிதறி பலியாகினர்.

சுமார் முப்பது பேர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு எந்தவொரு இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. என்றாலும், தற்கொலை குண்டுதாரியின் வசம் போகோ ஹராம் இயக்கத்தின் இலச்சினை இருந்ததாக பொலிஸார் கூறினர்.