உறவினர்களுக்குப் பயந்து கற்குவாரியில் ஒளிந்திருந்த இளைஞன், பாறை விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பாதுக்கையில் இடம்பெற்றுள்ளது.

எச்.பி.ஜானக குமார (20) என்பவர் பாதுக்கை, மீரியகால்ல பகுதியைச் சேர்ந்தவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் காதல் பூத்திருக்கிறது. இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் வீட்டுக்குத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, அவர்கள் தன் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் ஜானக குமார, நேற்று (20) பாதுக்கையில் உள்ள ஒரு கற்குவாரியில் சென்று ஒளிந்திருக்கிறார்.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பாறை ஒன்று உருண்டு விழுந்ததில் உடல் நசுங்கி பலியானார்.