கொழும்பு, டெல்லி, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் காற்று மாசடைவது அதிகரித்து வருகிறது என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

காற்று மாசடைவது அதிகரித்தால் இதன் காரணமாக ஆஸ்துமா நோயின் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், புதிதாக ஆஸ்துமா நோயாளிகள் உருவாகுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் காற்றில் மாசு அதிகரிப்பதால் நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோயின் பாதிப்பு தீவிரமாகும். இதன் காரணமாக இரத்த அழுத்தம் உயரக்கூடும். திடிரென்று இதய பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசடைவதை தடுப்பதற்கான விழிப்புணர்வை நாம் அனைவரும் பெறவேண்டும். தெத்றகாசியா நகரங்களைப் பொறுத்தவரை அதிகாலையில் காற்றின் மாசு அதிகமாக இருப்பதாகவும், இது குறிப்பிட்ட பருவ காலத்தினை ஒட்டியதாகவும் இருப்பதாக கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே காலையில் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள், காற்றின் தரம் குறித்த குறியீட்டு எண்ணைக் கண்காணித்துக் கொண்ட பின்னர் பயிற்சியில் ஈடுபடுவது சால சிறந்ததாகும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்