மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா அப்புகஸ்தென்ன மேல் பிரிவு தோட்டத்தில் 8 வயதுடைய  பாடசாலை மாணவியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தின்பேரில் குறித்த தோட்டத்தின் காவலாளியொருவரை நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டிரோன் ரத்நாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய மாணவி மஸ்கெலியா அப்புகஸ்தென்னை பகுதியை சேர்ந்தவர் என்றும் குறித்த மாணவி பாடசாலையில் நடைபெற்ற பிரத்தியேக வகுப்புக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது, பாலியல் வல்லுறவு மேற்கொண்டுள்ளதாக மாணவி கல்விகற்கும் பாடசாலை அதிபரினால் முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் நேற்றிரவு பத்து மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த மாணவி மற்றும் சந்தேக நபர் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், வைத்திய அறிக்கை கிடைத்த பின் சந்தேகநபர் அட்டன் நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.