முல்லேரியா பொலிஸ் பிரிவில் கடமையாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகரொருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைசெய்துகொண்டவர் இங்கிரியவைச் சேர்ந்த  57 வயதுடைய உப பொலிஸ் பரிசோதகர் பிரேமசிறி ஆவார்.

கடமை நிமித்தம் வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தியே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

விடுதிக்குள் இருந்து இன்று காலை குறித்த உப பொலிஸ் பரிசோதகரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.