முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட மூவர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று குறித்த மூவரும் ஆஜர்படுத்தப்பட்ட போது, நீதிபதி, லங்கா ஜயரத்னவினால் தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அலுவலக பிரதானி காமினி செனரத், பியதாச குடாபாலகே, நீல் ஹம்புஹந்த ஆகியோர் இவ்வாறுபிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காமனி செனரத் மற்றும் பியதாச குடாபாலகே ஆகியோருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளமையால் குறித்த இருவரின் கடவுசீட்டுக்களையும் நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகளுக்கு

9ஆம் திகதி நீதி­மன்றில் சர­ண­டை­கின்றார் மஹிந்­தவின் அலு­வ­லக பிர­தானி செனரத்

மகிந்தவின் காரியாலயப் பணிப்பாளர் நீதிமன்றில் ஆஜர்