டயகம தமிழ் வித்தியாலயத்தில் கல்விபயிலும் 39  மாணவர்கள் திடீரென சுகயீனமுற்ற நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த மாணவர்கள்  வழக்கம்போல் இன்று ( 21.11.2017) காலை கற்றல்  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்களுக்கு மயக்கமும் வாந்தியும் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 19 ஆம் திகதி டயகம பகுதியில் இடம்பெற்ற ஆலய கும்பாபிஷேக நிகழ்வில் வழங்கப்பட்ட அன்னதானத்தை உண்ட சிலர் இவ்வாறு நோய்வாய்குட்பட்டமை தெரியவந்துள்ள நிலையில்  சுகாதார பரிசோதகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் டயகம வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் சிலர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனையோர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாகவும் எவருக்கும் ஆபத்தான நிலை இல்லை எனவும்  வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.