வவுனியாவில் இருவேறு இடங்களில் கஞ்சாவுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இவ் விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தனிமையாக நின்றிருந்த ஒருவரை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிசார் சோதனையிட்ட போது, யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிக் கொண்டு செல்லவிருந்த 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றசாட்டில் புத்தளத்தை சேர்ந்த முகமத் எம்னு (வயது - 30) என்ற நபரை கைது செய்ததாகவும் இதேவேளை, கொழும்பு செல்வதற்காக பஸ்ஸிற்காக காத்திருந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 30 வயதுடைய ராஜமாணிக்கம் ஜெகதீஸ் என்பவருடைய பயணபொதியில் 2 கிலோகிராம் கஞ்சாவினை வைத்திருந்ததன் குற்றசாட்டில் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

 

கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.