மன்னார் - முருங்கன், செட்டியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் நேற்று மதிய வேளையில் மின்னல் தாக்கி 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த சிறுவன் குறித்த கிராமத்தைச் சேர்ந்த 11 வயதான நித்தியானந்தன் ரஸ்கின் என தெரிய வந்துள்ளது.

குறித்த சிறுவன் நேற்று மதியம் 2.30 மணியளவில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த தனது தந்தைக்கு வீட்டில் இருந்து மதிய உணவை கொண்டு சென்ற போதே வயல் பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் உடல் மன்னார் வைத்திய சாலையில் பிரேத பிரசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதத்க்கது.