நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை,பொய் பிரச்சாரம் செய்வோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பெற்றோலுக்கு மீண்டும் தட்டுப்பாடு என விசமிகளால் பரப்பப்பட்டுள்ள வதந்தியால் கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளில் அமைந்துள்ள எரி பொருள் நிரப்பும் நிலையங்களில் பாரியளவு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எனவே மேற்கண்டவாறு வதந்திகளை பரப்புவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறித்த விடயம் தொடர்பாக வதந்தியை பரப்பியவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வு துறையிடம் எழுத்து மூல கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

பெற்றோலுக்கு தட்டுப்பாடு நிலவவில்லை : வதந்திகள் குறித்து அச்சமடைய வேண்டியதில்லை