8 இந்திய மீனவர்கள் கைது.!

Published By: Robert

19 Nov, 2017 | 03:31 PM
image

சட்ட விரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை வசப்படுத்தியுள்ளது. 

இலங்கை கச்சத்தீவு பகுதியில் நேற்று இரவு 7.15 மணியளவில் இந்திய மீனவர்கள் நால்வர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன்  நேற்று பின்னிரவு 10.50 மணியளவில் மேலும் நான்கு இந்திய தமிழக மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இந்திய மீனவர்களின் இரண்டு படகுகளை இலங்கை கடற்படை தன்வசப்படுத்தியுள்ளது. 

கைதுசெய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களையும் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இன்று இவர்களை  யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந் நிலையில்  கடந்த  வெள்ளிக்கிழமை இந்திய மீனவர்கள் 10 பேர் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில்  பருத்தித்துறை கடல் எல்லையில் இலங்கை கடற்படையினரால் கைது  செய்யப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன் அவர்கள் தொடர்பிலான வழக்கும் யாழ் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹவாய் 'ரிம்பேக்' சர்வதேச கடற்படைப் பயிற்சியில்...

2026-07-21 15:53:28
news-image

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல்...

2026-07-21 15:47:00
news-image

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும்...

2026-07-21 15:27:16
news-image

இரத்தினபுரி வைத்தியசாலையில் உயிரிழந்த மகளின் மரணம்...

2026-07-21 14:46:43
news-image

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச சேவையும்...

2026-07-21 14:55:45
news-image

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை...

2026-07-21 14:39:05
news-image

தித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு...

2026-07-21 14:51:49
news-image

அட்டனில் தற்காலிக கடைகளை அகற்றச் சென்ற...

2026-07-21 14:24:27
news-image

மரதன்கடவலையில் சொகுசு பேருந்து – லொறி...

2026-07-21 14:25:22
news-image

ஹாலிஎல , உனுகொல்ல தோட்ட இளைஞர்...

2026-07-21 13:59:26
news-image

இலங்கையில் விவசாய இயந்திர மையம் அமைப்பது...

2026-07-21 13:42:48
news-image

ஹோமாகம - கட்டுவான  தலைக்கவச உற்பத்தி...

2026-07-21 13:43:07