உங்கள் பெயரின் முதல் எழுத்து என்ன? நீங்கள் இப்படி தான்

Published By: Robert

19 Nov, 2017 | 12:26 PM
image

நாம் ஒவ்­வொ­ரு­வரும் தமிழில் நம் பெயரை எழு­து­வதைப் போல ஆங்­கி­லத்­திலும் எழு­து­வ­துண்டு. அதன் படி ஆங்­கி­லத்தில் நம் பெயரின் முதல் எழுத்தை கொண்டு குணத்தை கணிக்கும்  ஒரு வகை ஜோதிடம் உண்டு. அதன்­படி உங்கள் பெயர் எந்த எழுத்தில் ஆரம்­பித்தால் என்ன பலன் என்று பார்ப்போம் வாருங்கள். 

A

ஆங்­கி­லத்தின் முதல் எழுத்­தான “A” என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் எதிலும் அதிகம் ஈடு­பாடு உள்­ள­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­களின் உடல் அம்சம் மற்­ற­வர்­களை ஈர்க்கும் வண்ணம் இருக்கும். இவர்கள் எதிலும் உறு­தி­யோடு இருப்­ப­தோடு பிறரை வழி­ந­டத்தும் ஆற்றல் இவர்­க­ளிடம் இருக்கும். இவர்கள் மற்­ற­வர்­களின் உத­வியை பெரிதும் எதிர்­பா­ராமல் சொந்­தக்­காலில் நிற்க முயற்­சிப்பார். 

B

 ஆங்­கி­லத்தின் இரண்­டா­வது எழுத்­தான “B” என்னும் .எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் தன் மீது மற்­ற­வர்கள் செலுத்தும் அன்­பிற்கு அதிகம் மதிப்­ப­ளிப்பர். அதோடு பிறர்­மீதும் இவர்கள் அதிகம் அன்பு செலுத்­துவர். இவர்கள் தைரிய சாலி­யாக இருந்­தாலும் கூட அன்பு மிகு­தி­யாக இருக்கும் கார­ணத்­தினால் பல நேரங்­களில் உணர்ச்­சி­வ­சப்­ப­டுவர்.

C

ஆங்­கி­லத்தின் மூன்றாம் எழுத்­தான “C”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் ஒரு மிகச் சிறந்த பேச்­சா­ளராய் இருக்க வாய்ப்­புக்கள் அதிகம். வாயை வைத்து பிழைத்துக் கொள்ளும் ஆற்றல் இவர்­க­ளிடம் இருக்கும். இவர்கள் பல துறை­களில் உள்ள பல விட­யங்­களை அறிந்து வைத்­தி­ருப்­பர். இவர்­களின் குறை பற்றி கூற­வேண்­டு­மானால் இவர்கள் அதிகம் செலவு செய்­வார்கள். 

D

 ஆங்­கி­லத்தின் நான்காம் எழுத்­தான “D”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்­க­ளிடம் ஆளுமை தன்மை அதிகம் இருக்கும். வணிகம் செய்­வதில் இவர்கள் வல்­ல­வர்­க­ளாக இருப்­பார்கள். நம்­பிக்கை மிக்­க­வர்­க­ளா­கவும் பிற­ருக்கு எப்­போதும் உதவும் குணம் கொண்­ட­வர்­க­ளா­கவும் விளங்குவர்.

  இவர்கள் சுகா­தா­ரத்­துக்கு முக்­கி­யத்­துவம் அளிப்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். 

E

ஆங்­கி­லத்தின் ஐந்தாம் எழுத்­தான “E”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் மென்­மை­யான குணம் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். நண்­பர்­களை எளிதில் பெறும் குணம் கொண்ட இவர்கள் பிற­ரிடம் தொடர்பு கொள்­வதில் சிறந்­த­வர்­க­ளாக இருப்பர். 

F

ஆங்­கி­லத்தின் ஆறாம் எழுத்­தான “F” என்னும் எழுத்தில்  ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் தன்னை சுற்றி உள்­ள­வர்­களை முடிந்­த­வரை மகிழ்ச்­சி­யாக வைத்துக் கொள்ளும் திறன் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். திட்­ட­மி­டு­வதில் சிறந்­த­வர்­க­ளாக விளங்கும் இவர்கள் பிறரின் நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மாக விளங்­குவர். 

G

ஆங்­கி­லத்தின் ஏழாம் எழுத்­தான “G”  என்னும் எழுத்தில் ஒரு­வ­ரின்­பெயர் தொடங்­கினால் அவர்கள் வர­லாற்றில் ஆர்வம் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். அதோடு மற்­ற­வர்கள் இவர்­களின் விட­யத்தில் மூக்கை நுழைப்­பதை இவர்கள் எப்­போதும் விரும்­பு­வ­தில்லை. பய­ணத்தில் ஆர்வம் மிக்க இவர்கள் தங்கள் மதத்தின் மீதும் அதிகம் பற்­றுள்­ள­வர்­க­ளாக  இருப்­பார்கள். 

H

ஆங்­கி­லத்தின் எட்டாம் எழுத்­தான “H”  என்னும் எழுத்தில் ஒரு­வ­ரின்­பெயர் தொடங்­கினால் அவர்கள் பிறரை ஊக்­கு­விப்­பதில் சிறந்­த­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­க­ளிடம் சற்று நேரம் பேசினால் போதும் நமக்கு ஒரு தெம்பு வந்­து­விடும் என்று கூறு­வது போல இருக்கும் இவர்­களின் பேச்சு. அதோடு இவர்­க­ளிடம் மற்­ற­வர்­களை சிறப்­பாக கட்­டுப்­ப­டுத்தும் தன்மை இருக்கும். 

I

ஆங்­கி­லத்தின் ஒன்­பதாம் எழுத்­தான “I”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் அழகு சம்­பந்­த­மான வேலை­களை மிக சிறப்­பாக செய்­வார்கள். பியூட்டி பார்லர், பேஷன் டிசைன் போன்­ற­வற்றில் இவர்­க­ளுக்கு ஆர்வம் அதி­க­மாக இருக்கும். இவர்கள் அனைத்­தையும் தைரி­ய­மாக எதிர்­கொள்ளும் தன்மை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். .J

 ஆங்­கி­லத்தின் பத்தாம் எழுத்­தான “J”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் விடா­மு­யற்­சி­யோடு செயல்­ப­டுவர். ஒன்றை அடை­ய­வேண்டும் என்று நினைத்தால் அதற்­காக பல முயற்­சி­களை எடுக்கும் குணம் கொண்­ட­வர்கள் இவர்கள். தன் வாழ்க்­கைத்­து­ணையை பெரும்­பாலும் இவர்­களே தேர்ந்­தெ­டுப்பர். 

K

ஆங்­கி­லத்தின் பதி­னோராம் எழுத்­தான “K” என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் வாழ்வில் அர்த்­த­முள்ள செயல்­களை செய்ய எண்­ணு­வார்கள். எதையும் பேச வெட்­கப்­படும் இவர்கள் தனக்கு பிடித்­த­வர்­களை மிகவும் அன்­போடு கவ­னித்துக் கொள்வர். உடல் ரீதி­யாக இவர்கள் நல்ல திட­மா­ன­வர்­க­ளாக இருந்­தாலும் மன­த­ளவில் எளிதில் உணர்ச்­சி­வ­சப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருப்­பார்கள். 

L

ஆங்­கி­லத்தின் பன்­னி­ரண்டாம் எழுத்­தான “L”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் தன் அன்பை சரி­யான நப­ரிடம் வெளிப்­ப­டுத்­து­வதில்  தயக்கம் கொள்வர். இதனால் அன்பு சம்­பந்­த­மான விட­யத்தில் சில நேரங்­களில் பிரச்­சி­னைகள் வரலாம். வாழ்வில் எப்­ப­டி­யா­வது உயர வேண்டும் என்ற எண்ணம் இவர்­க­ளிடம் இருக்கும். 

M

ஆங்­கி­லத்தின் பதின்­மூன்றாம் எழுத்­தான “M”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் மற்­ற­வர்­க­ளுக்கு சிறப்­பாக அறி­வு­ரைகள் வழங்­கு­வதில் வல்­ல­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்­க­ளுக்கு மிக சிறந்த நண்­பர்கள் கிடைப்­பார்கள். அதோடு இவர்­களின் வாழ்க்­கை­து­ணையும் இவர்­க­ளிடம் உண்­மை­யாக இருப்பர். 

N

ஆங்­கி­லத்தின் பதி­னான்காம் எழுத்­தான “N”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் எந்த ஒரு செய­லையும் முழு­மை­யாக செய்ய வேண்டும் என்று எண்­ணு­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். எதிலும் துடிப்­போடும் விடா­மு­யற்­சி­யோடும் செயல்­படும் எண்ணம் இவர்­க­ளிடம் இருக்கும். 

O

ஆங்­கி­லத்தின் பத­னைந்தாம் எழுத்­தான “O”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் கல்­விக்கு அதிகம் முக்­கி­யத்­துவம் கொடுப்­ப­வர்­க­ளாக இருப்­பார்கள். இதனால் எழுத்­தாளர்,  பேரா­சி­ரியர், பள்ளி ஆசி­ரியர் போன்ற பணிகள் இவர்­க­ளுக்கு உகந்­த­தாக  இருக்கும். அனை­வ­ரி­டத்­திலும் ஒழுக்­கத்தை இவர்கள் அதிகம் எதிர்­பார்ப்­பார்கள். 

P

ஆங்­கி­லத்தின் பதி­னாறாம் எழுத்­தான “P”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் பட­ப­ட­வென பேசி­னாலும் மிகுந்த அறி­வுக்­கூர்­மை­யோடு செயல்­ப­டு­வார்கள். இவர்கள் மற்­ற­வர்­க­ளிடம் எப்­படி பழக வேண்டும் என்­பதை நன்கு அறிந்து வைத்­தி­ருப்­பார்கள். 

Q

ஆங்­கி­லத்தின் பதி­னேழாம் எழுத்­தான “Q”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் ஒரு சிறந்த பேச்­சா­ள­ரா­கவும் எழுத்­தா­ள­ரா­கவும் இருப்­பார்கள். சினிமா துறையில் இவர்கள் சென்றால் நல்ல ஒரு முன்­னேற்றம் இருக்கும். அதோடு இவர்கள் பத்­தி­ரிகை போன்ற துறை­யிலும் ஜொலிக்க வாய்ப்­புள்­ளது.

R

ஆங்­கி­லத்தின் பதி­னெட்டாம் எழுத்­தான “R”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் ஒரு மிக சிறந்த மனி­த­ராக இருப்­பார்கள். அன்­பையும் கரு­ணை­யையும் வாரி வழங்­கு­வார்கள். சவால்­களை எதிர்­கொள்ளும் திறன் கொண்ட இவர்கள் எதையும் லேசாக எடுத்துக் கொள்­வார்கள். 

S

ஆங்­கி­லத்தின் பத்­தொன்­பதாம் எழுத்­தான “S”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் புதிய யுக்தி மூலம் எதிலும் வெற்றி பெறும் திறன் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். அதோடு மற்­ற­வர்­களின் கவனம் எப்­போதும் இவர்­களின் மீது இருக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்­க­ளுக்கு சற்று அதிகம் உண்டு. 

T

ஆங்­கி­லத்தின் இரு­பதாம் எழுத்­தான “T”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் எதையும் எதிர்­கொள்ளும் மன­வ­லிமை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். எதிலும் சுறு­சு­றுப்­போடு செயல்­படும் ஆற்றல் கொண்ட இவர்கள் வாழ்வில் எளிதில் முன்­னே­று­வார்கள். 

U

ஆங்­கி­லத்தின் இரு­பத்­தி­யோராம் எழுத்­தான “U”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் அறி­வு­பூர்­வ­மான விட­யங்கள் சம்­பந்­த­மாக ஓவியம் வரை­வ­திலும் எழு­து­வ­திலும் ஆர்வம் மிக்­க­வர்­க­ளாக இருப்­பார்கள். பத்­தி­ரிகை ஓவியம் மற்றும் எழுத்து சம்­பந்­தப்­பட்ட துறையில் இவர்கள் இருந்தால் எளிதில் முன்­னே­று­வார்கள். 

V

ஆங்­கி­லத்தின் இரு­பத்­தி­ரெண்டாம் எழுத்­தான “V”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் நடை­மு­றைக்கு ஏற்­ற­வாறு வாழும் தன்மை கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். இவர்கள் அனை­வ­ரி­டத்­திலும் அன்­போடு பழ­கு­வ­தோடு மென்­மை­யான குணம் கொண்­ட­வர்­க­ளாக இருப்­பார்கள். 

W

ஆங்­கி­லத்தின் இரு­பத்தி மூன்றாம் எழுத்­தான “W”  என்னும் எழுத்தில் ஒரு­வரின் பெயர் தொடங்­கினால் அவர்கள் ஒரு புரி­யாத புதி­ராக இருப்­பார்கள். ஆனாலும் அவர்­க­ளிடம் அன்­பிற்கு பஞ்சம் இருக்­காது. அனை­வ­ரி­டத்­திலும் இவர்கள் பாச­மாக இருப்­பார்கள். 

X

ஆங்­கி­லத்தின் இரு­பத்தி நான்காம் எழுத்தான “X”  என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால் அவர்கள் மற்றவர்களிடம் எளிதில் பழகிவிடுவார்கள். இவர்கள் சற்று ஆடம்பரமாக வாழவேண்டும் என்று எப்போதும் எண்ணுவார்கள். 

Y

ஆங்கிலத்தின் இருபத்திஐந்தாம் எழுத்தான “Y”  என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால் அவர்கள் தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். இக்கட்டான சமயங்களில் துணிச்சலாக முடிவெடுப்பதில் இவர்கள் சிறந்து விளங்குவர்.

Z

ஆங்கிலத்தின் இருபத்திஆறாம் எழுத்தான “Z”  என்னும் எழுத்தில் ஒருவரின் பெயர் தொடங்கினால் அவர்கள் மற்றவர்களைப் பற்றி எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களுக்கென்று கூட்டம் எப்போதும் இருக்கும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20
news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25
news-image

தன ஆக்கர்ஷன மூலிகையை பயன்படுத்தும் வழிமுறை...!

2024-02-12 17:42:51