சிங்கர் வர்த்­தக கிரிக்கெட் சங்க  இரு­ப­துக்கு 20 பிறீ­மியர் லீக் போட்­டியின் இறுதிப் போட்­டிக்கு தில­க­ரட்ண டில்ஷான் தலை­மை­யி­லான மாஸ் யூனிச்­சேலா அணியும் நிசன் தராக்க தலை­மை­யி­லான டிமோ அணியும் தகுதி பெற்­றுள்­ளன. இப்­போட்டி  இன்று பிற்­பகல் 1.30 மணிக்கு கொழும்பு எம்.சி.ஏ. மைதா­னத்தில் நடைபெறவுள்ளது.

ரமித் ரம்­புக்­வெல்­லவின் அதி­ரடி சதத்தின் உத­வி­யுடன் மாஸ் யூனிச்­சேலா அணியும் தீ­க் ஷில டி சில்­வாவின் மூன்­றா­வது தொடர்ச்­சி­யான அரைச் சதத்தின் உத­வி­யுடன் டிமோ அணியும் சிங்கர் வர்த்­தக கிரிக்கெட் சங்க  (எம்.சி.ஏ.) 20 ஓவர் ப்றீமியர் லீக் இறுதிப் போட்­டியில் விளை­யாட தகு­தி­பெற்­றன.

மாஸ் யூனிச்­சேலா வெற்றி

பி.சர­வ­ண­முத்து ஓவலில் நடை­பெற்ற முத­லா­வது அரை இறு­தியில் தில­க­ரட்ண டில்ஷான் தலை­மை­யி­லான மாஸ் யூனிச்­சேலா அணி 51 ஓட்­டங்­களால் டீஜே அணியை வெற்­றி­கொண்­டது.

மாஸ் யூனிச்­செலா முதலில் துடுப்­பெ­டுத்­தாடி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­களை இழந்து 207 ஓட்­டங்­களைக் குவித்­தது.

ரமித் ரம்­புக்­வெல்ல 52 பந்­து­களில் 11 சிக்­சர்கள், 3 பவுண்ட்­ரிகள் அடங்­க­லாக 105 ஓட்­டங்­களை விளா­சினார்.இவரை விட மஹேல உட­வத்த 36 ஓட்­டங்­களைப் பெற்றார்.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய டீஜே அணி 18.4 ஓவர்­களில் சகல விக்­கெட்­க­ளையும் இழந்து 156 ஓட்­டங்­களை மாத்­தி­ரமே பெற்­றது. சரித் அக்­க­லன்க மாத்­தி­ரமே திற­மை­யாக துடுப்­பெ­டுத்­தாடி 40 ஓட்­டங்­களைப் பெற்றார். பந்­து­வீச்சில் பெர்விஸ் மஹ்றூவ் 17 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டுகளை வீழ்த்­தினார்.

டிமோ வெற்றி

இரண்­டா­வது அரை இறுதிப் போட்­டியில் எல்.பி. பினான்ஸ் அணியை 6 விக்­கெட்டு­களால் டிமோ வெற்­றி­கொண்­டது. இப்­போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய எல்.பி.பினான்ஸ் அணி 20 ஓவர்­களில் 8 விக்­கெட்­டு­களை இழந்து  17 ஓட்­டங்­களைப் பெற்­றது. பதி­லுக்குத் துடுப்­பெ­டுத்­தா­டிய டிமோ அணி 18.2 ஓவர்­களில் 4 விக்­கெட்­டு­களை மாத்­திரம் இழந்து 173 ஓட்­டங்­களை பெற்று 6 விக்­கெட்­டு­களால் வெற்­றி­யீட்டி இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது.