ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்த ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் அரச குடும்பத்து அங்கத்தவராவார்.

 

அரபு இராஜ்ஜியத்தின் அமைச்சர் தலைமையில் 30 பேர் கொண்ட தூதுக்குழுவினர் விசேட விமானத்தின் மூலம் இலங்கை வந்துள்ளனர். 

இலங்கை வந்துள்ள ஐக்கிய அரபு இராஜ்ஜியதின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஷெயிக் அப்துல்லா பின் ஹல்தானி, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.