பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம் எழுதிய ‘இயற்கையோடு இணைந்த வாழ்வு’ என்ற நூல் இன்று வெளியிடப்படவுள்ளது.

இந்த நூல் வெளியீட்டு விழா இன்று ( 2017.11.18 )சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறும்.

இங்கிலாந்திலிருந்து வருகை தந்திருக்கும் பிரதிபலிப்பு சிகிச்சை (REFLEXOLOGY) நிபுணர் திருமதி. இராஜேஸ்வரி ஈஸ்வரஞானம், இலங்கையில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்வதுடன், மருந்தில்லா வைத்தியமுறையை இலவசமாக பயிற்றுவித்தும் வருகிறார். 

யாழ்ப்பாணம், கரவெட்டி, பருத்தித்துறை, கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பிரதிபலிப்பு சிகிச்சையை இலவசமாக செய்துவிட்டு கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவில் அனைவரையும் பங்கேற்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளதுடன் மேலதிக விபரங்களுக்கு 0764108415 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்ளமுடியும்.