கிளி­நொச்சி திரு­வை­யாறு பகு­தியில் அமைந்­துள்ள  சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து நேற்று முன்­தினம் இரவு ஐந்து சிறு­வர்கள், சிறுவர்  இல்­லத்தை விட்டு தப்­பி­யோ­டி­ய­மை­யினால் பிர­தே­சத்தில் பரபரப்பு ஏற்­பட்­டது.

இது தொடர்பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கைகளில் காயங்­க­ளுடன் திரு­வை­யாறு சிறுவர் இல்­லத்­தி­லி­ருந்து சிறு­வர்கள் தப்­பி­யோ­டி­யுள்­ளனர். 

குறித்த சிறுவர் இல்­லத்­தி­லி­ருந்து வெளி­யேறி அயலில் உள்ள காணி­களில் இவர்கள் ஒளிந்­தி­ருந்த நிலையில் கிரா­மத்து இளை­ஞர்கள் குறித்த சிறு­வர்­களை மீட்டு விசா­ரித்த போது இல்­லத்தில் உள்ள தங்­க­ளுக்கு பொறுப்­பா­ன­வர்கள்  தாக்­கி­ய­தனால் தாங்கள் சிறுவர் இல்­லத்­தி­லி­ருந்து ஓடி­வந்து விட்­ட­தா­கவும் இரவு ஒன்று கூட­லுக்கு தாம­த­மா­கியும் செல்­லாத கார­ணத்­தினால் தங்­க­ளுக்கு கடு­மை­யாக அடி விழுந்­த­தா­கவும் சிறு­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர். அத்­தோடு ஒரு சிறுவன் தனது கையில் ஏற்­பட்ட காயத்தை காட்டி அடித்­ததால் ஏற்­பட்ட காயம் என்றும் குறிப்­பிட்­டுள்ளார்.

இதன் போது சம்­பவ இடத்­திற்கு வருகை தந்த சிறுவர் இல்ல ஊழி­யர்கள் தாங்கள் சிறு­வர்­களை தாக்­க­வில்லை என்றும் இரவு ஒன்று கூட­லுக்கு சிறு­வர்கள் சமுகம் தராது மரங்­களில் ஏறி­யி­ருந்­த­தா­கவும், சிறு­வர்­களை ஒன்று சேர்ப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட முயற்­சியின் போதே சிறு­வர்கள் இல்­லத்தை விட்டு ஓடி­ய­தா­கவும் குறிப்­பிட்டவர்கள் ஒரு சிறு­வனின் கையில் ஏற்­பட்ட காயம் அவர் மரத்­தி­லி­ருந்து இறங்கும் போது ஏற்­பட்ட காயம் என்றும் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த நிலையில் மாவட்ட சிறுவர் நன்­நடத்தை அதி­கா­ரிக்கு தகவல் அனுப்­ப­ப்பட்டு அவர் உட­ன­டி­யாக சம்­பவ இடத்­திற்கு சென்று நிலை­மை­களை ஆராய்ந்­த­தோடு சிறு­வர்­களை மீண்டும் சிறுவர் இல்­லத்­திற்கு அனுப்பி  வைத்­துள்­ள­துடன் மேலும் குறித்த சம்­பவம் தொடர்பில் உரிய சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும்  தெரி­வித்­துள்ளார்.