இந்­தி­யா­வுக்கு எதி­ரான முத­லா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்­சாளர் சுரங்க லக்மால் ஓட்­ட­மேதும் கொடுக்­காமல் 46 பந்­து­களை வீசி சாதனைப் படைத்­துள்ளார். அதில் மூன்று விக்­கெட்­டுக்­க­ளையும் வீழ்த்­தி­யுள்ளார்.

2001ஆம்  ஆண்­டுக்குப் பிறகு தொடர்ந்து 7 ஓவர்களை ஓட்டமற்ற ஓவர்களாக வீசி, 46 பந்­து­க­ளுக்குப் பிறகு ஓட்டம் கொடுத்த ஒரே வீரர் - லக்மால் என்­கிற பெரு­மையைப் பெற்­றுள்ளார். 

2015-ஆம் ஆண்டு ஜெரோம் டெய்லர், அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக 40 பந்­துகளை ஓட்­ட­மேதும் கொடுக்­காமல் வீசினார். 

இதற்கு முன்பு லக்மால், 2014ஆம் ஆண்டு தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ராக 27 பந்­து­களை ஓட்­ட­மேதும் கொடுக்காமல் வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.