நவம்பர் மாதம் 22 ஆம் திகதி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் குறித்த  வழக்கு வாபஸ் பெறப்­ப­ட­வில்­லை­யென்றால் அர­சியல் போக்கு வேறு பக்­க­மாக திசை திரும்பும் என்­பதை ஜனா­தி­ப­தியும் அவ­ரது சகாக்­களும் புரிந்­து­கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலை­வரும், எதிர்க்­கட்சி பிர­த­ம­கொ­ர­டா­வு­மான அநு­ர­கு­மர திஸ­நா­யக்க சபையில் பகி­ரங்க எச்­ச­ரிக்கை விடுத்தார்.

நீதி­மன்­றத்தில் அமைச்சர் பைஸர் முஸ்­த­பா­வுக்­குவும் அவ­ரது செய­லா­ள­ருக்கும் எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கில் அவ­ரது கனிஷ்ட சட்­டத்­த­ர­ணி­களே ஆஜ­ரா­கின்­றனர். இது சரி­யாக முஸ்­பா­வுக்கு எதி­ராக முஸ்­தபா என்ற நிலை­மையே உள்­ளது என்றும் சுட்­டிக்­காட்க்­காட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை 2018ஆம் ஆண்­டுக்­கான வர­வு­செ­ல­வுத்­திட்­டத்தில் ஜனா­தி­பதி பிர­தமர், எதிர்­கட்­சித்­த­லைவர், பாரா­ளு­மன்றம், ஆணைக்­கு­ழுக்கள், திணைக்­க­ளங்கள், ஆகி­ய­வற்­றுக்­கான ஒதுக்­கீ­டுகள் தொடர்­பான குழு நிலை விவாத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

உள்­ளூ­ராட்சி தேர்தல் தொடர்­பாக விட­யத்­துடன் சம்­பந்­தப்­பட்ட அமைச்சர் வர்த்­த­மானி அறி­வித்­தலை விடுத்­துள்ள நிலையில், சிறு குழு­வொன்று தமது குறு­கிய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக தேர்­தல்­களை காலம் தாழ்த்தும் முயற்­சி­களில் இறங்­கி­யி­ருக்­கின்­றது.  

குறிப்­பாக ஒன்­பது மாதங்­க­ளுக்கு முன்னர் வெளி­யி­டப்­பட்ட எல்லை நிர்­ணய அறிக்­கை­யொன்றை அடிப்­ப­டை­யாக வைத்து நீதி­மன்­றத்தில் வழக்கு தாக்கல் செய்­துள்­ளனர்.  இதன்­மூலம் சிலர் தமது வஞ்­சக அர­சி­ய­லுக்­காக நீதி­மன்றை படுத்­து­கின்­றனர். 

 ற்போது ஆறு வழக்­குகள் தொட­ரப்­பட்­டுள்­ளன. அந்த ஆறு வழக்­கு­க­ளுடன் தொடர்­பு­டைய மனு­தா­ரர்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் பாரா­ளு­மன்­றத்­தினுள் இருக்­கின்­றனர். அவர்­க­ளது இந்த வஞ்­ச­மான நோக்கம் எதற்­காக என்­பதை சபையில் உரி­யவர் வெளிப்­ப­டுத்த வேண்டும்.

இதில் ஒரு உதா­ர­ணத்­தினை சுட்­டிக்­காட்­டுக்­கின்­றனர். குறித்­த­வொரு வழக்கில் பிர­தி­வா­தி­யாக அமைச்சர் பைசர் முஸ்­த­பாவும் அவ­ரது அமைச்சின் செய­லா­ள­ருமே குறிப்­பி­டப்­பட்­டுள்­ளனர். ஆனால் அதே பைசர் முஸ்­த­பாவின் கனிஸ்ட சட்ட தர­ணி­க­ளே­ம­னு­தா­ரர்­களில் ஆஜ­ரா­கின்­றனர் . மனு­தாரர் மற்றும் பிர­தி­வா­திகள் என இரு­த­ரப்­பிலும் பைசர் முஸ்­த­பாவின் கனிஷ்;ட சட்­டத்­த­ர­ணி­களே ஆஜ­ரா­கின்­றனர். இது முஸ்­தபா எதிர் முஸ்­தபா வழக்­கா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. அத்­த­கைய நிலையில் அந்த வழக்­கு­களை வாபஸ் பெற்­றுக்­கொள்ள வேண்டும்.

ஏகா­திப்­ப­திய, ஜன­நா­யக விரோத போக்கு ஆட்­சியை தோற்­க­டிப்­பதே 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி கிடைத்த மக்கள் ஆணையின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. ஜனா­தி­பதி சிறி­சேன அதை புரிந்­து­கொள்ள வேண்டும். மக்கள் ஆணைக்கு பயந்து இவ்­வாறு செயற்­படும் பட்­சத்தில் ஜனா­தி­ப­திக்கும் அவ­ரது அணி­யி­ன­ருக்கும் வர­லாற்றில் கிடைக்கப் போகும் ஸ்தானம் என்­ன­வென்­பது இன்­றி­லி­ருந்து எழு­தப்­படும்.

மக்கள் ஆணைக்கு பயந்து இவ்­வாறு செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு வர­லாற்றில்  என்ன இடம் கிடைத்­தி­ருக்­கி­றது. சூதாட்ட அடிப்­ப­டை­யி­லான அர­சியல் நிலைக்­காது. ஜனா­தி­பதி பதவி ஆச­னத்தில் அமர்ந்த பின்னர் கிடைத்த மக்கள் ஆணையை மறப்­பது தான் இது­வரை காலமும் நடந்­தே­றி­யி­ருக்­கி­ன­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இரண்டு வரு­டங்­க­ளி­லேயே தமக்கு கிடைத்த மக்கள் ஆணையை மறந்­து­விட்­டரோ என்ற சந்­தேகம் எமக்கு எழுக்­கின்­றது. 

தேர்­தலை ஒத்திவைக்கும் வஞ்கமான முயற்சிகள் நிறுத்தப்படாவிட்டால் தங்களால் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ள முடியாத தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்தாவது அதை தோற்கடிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதனடிப்படையில்  நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்த வழக்கு வாபஸ் பெறப்படவில்லையென்றால் அரசியல் போக்கு வேறு பக்கமாக திசை திரும்பும் என்பதை ஜனாதிபதியும் அவரது சகாக்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.