வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்க வேண்டும். அத்துடன். வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தவேண்டும் என்று ஐக் கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட யோசனையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
50 க்கும் மேற்பட்ட நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற இலங்கை குறித்த விவாதத்தின்போது பல்வேறு நாடுகள் கேள்விகளை எழுப்பியிருந்ததுடன் யோசனைகளையும் முன்வைத்திருந்தன. அந்த வகையிலேயே அனைத்து நாடுகளினதும் யோசனகைளுக்கு பரிந்துரைகள் அடங்கிய யோசனை நேற்று நிறைவேறப்பட்டது.
அந்த யோசனைகளில் முக்கிய பரிந்துரைகள் வருமாறு,
காணாமல் போனோர் அலுவலகத்தை உடனடியாக இயங்கும் நிலைக்கு கொண்டுவருதல். அத்துடன் காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு சுயாதீன ஆணையாளர்களை நியமித்தல்.
அந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன் சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படுதல்.
இதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் உடனடியாக வெ ளியிடுதல். காணாமல் போதல்கள், தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்துதல். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பான விபரங்களை உறவினர்களுக்கு வழங்குதல்.
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சர்வதேுச உதவிகளை பெறுதல் அத்துடன் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளல். ( இந்த பரிந்துரையை அடமெரிக்கா முன்வைத்துள்ளது.) யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை ஆழமாக்கி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தல். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குதல்.
சர்வதேச உதவியுடன் நம்பகரமான பாதிக்கபட்ட மக்களை கேந்திரமாக கொண்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்தல். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும் அலுவலகம் என்பனவற்றை நியமித்தல்.
2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான 30 /1 என்ற பிரேரணையை முழுமையாக அமுல்படுத்தல் (அமெரிக்கா இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.)
அரசியலமைப்பு மறுசீரமைப்பின்போது அனைத்து மக்களுக்குமான சமத்துவம் உறுதிபடுத்தப்படுதல் (கனடா) பயங்கரவத தடைச் சட்டத்தை உடனடியாக நீக்கவேண்டும் (கனடா) காணாமல் போனோரின் விபரங்களை வெ ளியிடுதல். வெ ளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குதல்.
வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்தல் ஆகிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM