குழந்தையின்மை பிரச்சினை எதனால் வருகிறது?

Published By: Robert

17 Nov, 2017 | 04:29 PM
image

இன்றைய திகதியில் திருமணமான தம்பதிகளில் 15 சதவீதத்தினர் குழந்தையின்மை பிரச்சினையைச் சந்திக்கிறார்கள். அதில் பெரும்பான்மையான பெண்கள் பொலிஸிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம் என்ற பாதிப்புடையவர்களாக இருக்கிறார்கள்.

இவர்களுக்கு இந்த பிரச்சினை திருமணமான பிறகு ஏற்படுவதில்லை. இவர்கள் 12 வயதிற்குள் இருக்கும் போதே அசைவ உணவினை விரும்பி சாப்பிடுபவர்களாகயிருப்பார்கள். அதிலும் ஆட்டிறைச்சி மற்றும் கோழியிறைச்சியை அதிகமாக விரும்பி சாப்பிடும் பிள்ளைகள் 10 அல்லது 11வது வயதிலேயே பூப்பெய்தி விடுவார்கள்.

இதற்கு காரணம் வணிக நோக்கில் வளர்க்கப்படும் கோழி மற்றும் ஆட்டிற்கு அதிக எடை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக வழங்கும் வேதிப் பொருளேக் காரணம். இந்த வேதிப் பொருளை சாப்பிடும் பிள்ளைகள், மலச்சிக்கல் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்த மாமிச உணவு எளிதில் ஜீரணமாவதில்லை. அதனால் தான் பெண் பிள்ளைகளைப் பெற்றிருக்கும் பெற்றோர்களிடம் மருத்துவர்களும், மருத்துவ நல அலுவலர்களும் கோழியிறைச்சியை அதிகம் வாங்கித்தரவேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.

ஆனால் பெற்றோர்கள் இதைக் காது கொடுத்து கேட்பதில்லை. தங்களுடைய பிள்ளைகள் விருப்பப்பட்டு கேட்டு விட்டார்கள் என்ற காரணத்தை முன்னிறுத்தி, சந்தையில் விற்பனையாகும் வறுத்த கோழியிறைச்சியை வாங்கி தருகிறார்கள்.

இது குடலின் சக்தியை குறைத்துவிடுகிறது. இதனால் அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஏற்படத் தொடங்குகிறது. கர்ப்பப்பையில் பொலிஸிஸ்டிக் ஓவரிஸ் எனப்படும் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது குழந்தையின்மையையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் மாதவிடாய் நின்ற பிறகு இத்தகைய பெண்கள் ஓஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பு தேய்மான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது. அதனால் பெண் பிள்ளைகள், நார்ச்சத்து அதிமுள்ள தாவர உணவுகளைச் சாப்பிட்டு, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் மாத விடாய் சுழற்சி சீராக இருக்கும்.குழந்தையின்மை பிரச்சினையும் வராது. 

டொக்டர் எஸ் ப்ரீத்தி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போஸ்ட் வைரல் ஓர்தரைடீஸ் எனும் காய்ச்சலுக்கு...

2025-01-22 17:01:32
news-image

வாய் வறட்சி எனும் உலர் வாய்...

2025-01-21 15:19:43
news-image

செபோர்ஹெக் டெர்மடிடிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2025-01-20 17:51:49
news-image

பிரஸ்பியோபியா எனும் பார்வை திறன் குறைபாட்டை...

2025-01-18 18:06:52
news-image

அதிகரித்து வரும் சிட்டிங் டிஸீஸ் பாதிப்பிலிருந்து...

2025-01-17 15:06:44
news-image

புல்லஸ் பெம்பிகொய்ட் - கொப்புளங்களில் திரவம்! 

2025-01-16 16:54:51
news-image

அறிகுறியற்ற மாரடைப்பும் சிகிச்சையும்

2025-01-15 17:42:27
news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15