இலங்கையில் சமஷ்டிக்கு ஒரு போதும் இடமளிக்கப்போவது இல்லை.  வடக்கில் உள்ள தமிழர்கள், தெற்கில் சிங்களவர்களிடம் இருந்து  பிரிந்து வாழ நினைப்பது தவறாகும்.  இதை முன்னெடுத்த பிரபாகரனால் அதை நிறைவேற்ற முடியாமல்  போனது. இதனை வடக்கு கிழக்கில் உள்ள அரசியல் பிரதிநிதிகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என  அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அனைத்து இன சமூகத்தினரும் இந்நாட்டில் இன மத  சுதந்திரத்துடன் வாழும் நிலையொன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில் மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வது போன்று வடக்கு தமிழர்களும் வாழ வேண்டும் எனவும்  அவர் வலியுறுத்தினார். 

சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியோக செவ்வி ஒன்றிலேயே மாநாகர மற்றும்  மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்   சம்பிக்க ரணவக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது 

இன்று நல்லாட்சியின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அரசாங்கத்தினால் அனைத்து சமூகத்தினருக்கும் நன்மையளிக்கும் பல்வேறு செயற்றிட்டங்கள் எவ்வித இன ரீதியிலான பாகுபாடுகளும்  இன்றி முன்னெடுக்கப்படுகின்றன.  அந்தவகையில் கடந்தக்காலங்களில் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் தனித்து வாழ நினைத்தமையினாலேயே முப்பது வருட கால யுத்தமொன்று  ஏற்பட்டது. 

 முப்பது வருட கால யுத்தத்திலிருந்து எமது நாடு விடு பட்டிருந்தாலும் யுத்தநடவடிக்கையினால்எதிர்நோக்க வேண்டிய  சவால்கள் மற்றும் அதன் தாக்கங்களை இன்றும் எமது நாட்டின் மக்கள் சுமந்து வருகின்றனர். 

மீண்டும் அவ்வாறான நிலைக்கு இடமளிக்க முடியாது. மலையக தமிழர்கள், முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வது போன்று வடக்கிழக்கு  தமிழர்களும் வாழ வேண்டும். அனைத்து இன மக்களும் தமது கலாசாரத்தை மதித்து வாழ சுதந்திரம் வேண்டும். என்பதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் அந்தவகையில்இந்நாட்டில்அதற்கான அனைத்து செயற்பாடுகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்உருவாக்கப்பட்ட நல்லாட்சி  தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கான அனைத்து ஒத்துழைப்புகள்  வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்தும் எதிர்ப்பார்க்கப்படுகின்றன. 

மறுபுறம் இன்று வெளிநாட்டில் உள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளை வைத்து இலங்கை முஸ்லிம்களை அச்சமூட்ட சிலர் முயற்சிக்கின்றனர்.  எமது நாட்டின்தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள்தொடர்பில்நாம்மிகவும்அவதானத்துடனும்பொறுப்புடனும்செயற்படுகின்றோம். அந்தவகையில் இது தொடர்பில்எந்தவொரு தரப்பினரும் அச்சம்கொள்ள வேண்டியது இல்லை. 

கிறிஸ்தவ மக்கள் இந்த நாட்டில் வாழ அன்றைய சிங்கள மன்னர்கள் இடமளித்த வரலாறுகள்எமது நாட்டில்அதிகளவு காணப்டுகின்றன.  அதேபோல் முஸ்லிம் மக்களை போர்த்துக்கேயரிடம் இருந்து சிங்கள மன்னர்கள் பாதுகாத்தனர். அதனால் தான் அவர்கள் இந்த நாட்டிலே வாழ்கின்றார்கள். வரலாற்று ரீதியில்அனைத்து மதத்தினரையும் ஒன்றினைத்து வாழ்ந்தவர்கள் என்றாள் அது எமது சமூகமே யாகும். அத்தோடு சிங்களவர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவது, அடுத்தவர்களுக்கு நல்வாழ்வளிப்பதையே குறிக்கும் என்றார்.