அட்டன் நகரிலுள்ள பிரபல பாடசாலையில் கல்விபயிலும் இரண்டு மாணவர்களிடமிருந்து மாவா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். 

அட்டன் பஸ்தரிப்பிடவளாகத்திலே இன்று மாலை மாவா போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேகத்தின் பேரில் குறித்த மாணவர்களை சோதனையிட்ட போது ஒரு மாணவனிடம் இருந்து 200 கிராம் மாவா போதைப்பொருள் காற்சட்டை பையிலிருந்து மீட்கப்பட்டதுடன் மற்றைய மாணவன் மாவா போதைப்பொருளை பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த மாணவர்கள் இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோர்களை வரவழைத்து ஆலோசனைகள் வழங்கியப்பின் மாணவர்கள் இருவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கவுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்  மாவா போதைப்பொருள் விற்பனையாளரை கைது செய்யும்  நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்