“ஒரே நாளில் முடிந்துவிடாது”: ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா

Published By: Devika

15 Nov, 2017 | 10:53 PM
image

இலங்கையில் மனித உரிமைகளை மீள் நிறுவ அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனினும் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேக வேகமாக மீள் நிறுவ முடியாதுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் சற்று முன் பேசிய இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்று காலாந்தர மதிப்பாய்வை முன்வைத்துப் பேசியபோதே இலங்கைக் குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர்.

தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரத்துறை பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு மேற்படி அமர்வில் கலந்துகொண்டுள்ளது.

இதில் பேசிய பிரதியமைச்சர் தெரிவித்ததாவது:

“சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டுச் சட்டங்கள் முழுமையாக அமுல் ஆவதில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினாலும்கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அதைப் பாதுகாப்பதும் ஒரே நாளில் நடந்துவிடக் கூடியது அல்ல. 

“மனித உரிமைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த எமது முயற்சிகள் மீதான சர்வதேசத்தினது விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடவும் நாம் தயாராக உள்ளோம்.

“ஆனால், எமது இந்த முயற்சியை சர்வதேசத் தலையீடுகளின் மூலம் குழப்புவதற்குச் சில சக்திகள் இயங்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். 

“எனினும், மனித உரிமைகளை முழுமையாக நாட்டில் அமுல்படுத்துவதில் இலங்கை அரசு முழுமனதுடன் உழைக்கும்.”

இவ்வாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நிலவும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் குறித்து...

2026-02-13 19:14:59
news-image

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே நடைமுறையில் சாத்தியமான...

2026-02-13 19:13:25
news-image

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளில் 600 வீடுகள்...

2026-02-13 23:01:10
news-image

மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தை விரைவுபடுத்துவதற்கும்...

2026-02-13 22:58:07
news-image

நீதிமன்ற கட்டமைப்பை அரசியல் மயப்படுத்த அரசாங்கம்...

2026-02-13 19:13:53
news-image

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத்...

2026-02-13 19:12:31
news-image

கனிம வள ஆய்வு குறித்து இந்திய...

2026-02-13 19:11:57
news-image

பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டவர்களே பதிலீடாகப் புதிய...

2026-02-13 21:59:02
news-image

டித்வா புயல் வீட்டு இழப்பீடு :...

2026-02-13 19:14:24
news-image

அமரகீர்த்தி கொலை வழக்கு : மரண...

2026-02-13 22:40:17
news-image

கஸ்ஸப்ப தேரருடன் தொடர்பில்லை – சுனில்...

2026-02-13 19:09:49
news-image

தமிழ் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு இன்றி...

2026-02-13 19:10:20