சர்வதேச நாணயப்பரிமாற்று முன்னோடிகளுடன் கைகோர்த்து, உள்நாட்டில் வெளிநாட்டுப் பணத்தை துரித கதியில் பெற்றுக்கொடுக்கும் வியாபாரத்தில் செலான் வங்கி எப்போதும் முன்னணியில் திகழ்கிறது. 

இந்தச் சேவையை சிறப்பாக பெற்றுக்கொடுக்கும் வகையில் உலகளாவிய ரீதியில் முகவர் வங்கி வலையமைப்பையும் நாணப்பரிமாற்றகங்களின் வலையமைப்பையும் செலான் வங்கி கொண்டுள்ளது.

அன்புடன் அரவணைக்கும் வங்கி எனும் தனது உறுதி மொழிக்கமைய, செலான் வங்கி “எதெர காசி மெதர வாசி” எனும் நாமத்தில் பரிசிழுப்புத்திட்டமொன்றை வெளிநாட்டு பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்திருந்தது. இதற்காக சர்வதேச நாணயமாற்று சேவை வழங்குநர்களான Express Money, RIA, Speed cash மற்றும் Unistream போன்ற சேவைகளுடன் கைகோர்திருந்தது.

இந்த பரிசிழுப்பினூடாக ஒரு அதிர்ஷ்ட வெற்றியாளருக்கு 1 மில்லியன் ரூபாயும், 6 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு தலா 100,000 ரூபா வீதமும், மாதாந்தம் ஆறுதல் பரிசாக 600 அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு தலா 5000 ரூபா வீதமும் வழங்கியிருந்தது.

இலங்கையிலுள்ள அன்புக்குரியவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட எந்தவொரு சேவையினூடாகவும் பணத்தை அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு, செலான் வங்கியிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் போது இந்த பரிசிழுப்பில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

செலான் வங்கி கல்முனை கிளையின் “எதெர காசி மெதர வாசி” திட்டத்தினூடாக மாதாந்த பரிசிழுப்பு வெற்றியாளர் ஒருவர் 100,000 ரூபா பெறுமதியான காசோலையை, கிழக்கு பிராந்திய முகாமையாளர் எஸ்.முத்ததிஸ்ஸவிடமிருந்து பெற்றுக்கொண்டார்.